உன்னாவ் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிய விபத்து குறித்து உயர் மட்ட விசாரணையை மமதா பானர்ஜி கோருகிறார்
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது காவல்துறையில் பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபார்.
அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று அந்த பெண், அவரது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வந்த கார் மீது லாரி மோதியது.
இந்த விபத்தில் அந்த பெண்ணின் தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்; தினமும் அவர்கள் வங்காளத்தை இழிவுபடுத்துகிறார்கள். ஆனால், உ.பி.யில் என்ன நடக்கிறது என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஏதாவது யோசனை இருக்கிறதா?. உன்னாவோவில் என்ன நடந்தது, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் இருவர் இறந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மோசமாக உள்ளது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
West Bengal CM Mamata Banerjee: Everyday they defame Bengal but does the government have any idea about what is happening in UP? What happened in Unnao, two relatives of victim died & she is in serious condition. There should be a high power inquiry. pic.twitter.com/ziAp17NLtO
— ANI (@ANI) July 29, 2019