Government Offices: பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டுதல்கள்

மத்திய அரசு அலுவலகங்கள், துறைகள் மற்றும் அமைச்சகங்களில் ஊழியர்களின் வருகையை ஒழுங்குபடுத்துவதற்காக பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 15, 2021, 02:47 PM IST
  • அரசு அலுவலகங்களில் பணியாளர் வருகைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
  • கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் சில முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன.
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து அலுவலகத்துக்கு வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Government Offices: பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டுதல்கள் title=

புதுடெல்லி: மத்திய அரசு அலுவலகங்கள், துறைகள் மற்றும் அமைச்சகங்களில் ஊழியர்களின் வருகையை ஒழுங்குபடுத்துவதற்காக பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் நேருதவிச் செயலர் (Under Secretary) மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் ஜூன் 16 முதல் ஜூன் 30 வரை அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அமைச்சகம் திங்களன்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து  பணியாற்றுவர்.

நேருதவிச் செயலருக்குக் கீழே உள்ள அரசாங்க அதிகாரிகளைப் (Government Officers) பொறுத்தவரை, அத்தகைய அதிகாரிகளில் 50 சதவீதம் பேர் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்திற்கு வருவார்கள். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகளுக்கும் வழங்கப்பட்ட உத்தரவு தெரிவிக்கிறது.

கோவிட் (COVID-19) தொற்றின் எண்ணிக்கை மற்றும் நேர்மறை விகிதம் கணிசமாகக் குறைந்துவிட்டது என்ற கருத்தின் அடிப்படையில், அரசு அலுவலகங்களில் வருகையை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை பணியாளர் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. 

"நேருதவிச் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்திற்கு வர வேண்டும்," என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளும் / ஊழியர்களும் கொவிட்டுக்கு  பொருத்தமான நடத்தையை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுதல் / சுத்திகரிப்பு, முகக்கவசம் (Face Mask) அணிந்துகொள்வது, அனைத்து நேரங்களிலும் தனி மனித இடைவெளியை கவனித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்த விஷயங்களில் மெத்தனத்தைக் காட்டினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக, அதிகாரிகள் / ஊழியர்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை, காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை என பிரிக்கப்பட்ட நேரங்களைப் பின்பற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து அலுவலகத்துக்கு வர விலக்கு அளிக்கப்படும். எனினும், அடுத்த உத்தரவு வரும் வரை இவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்: இனி நிதி நெருக்கடி இருக்காது

கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் அனைத்து அதிகாரிகளும் / ஊழியர்களும் அங்குள்ள நிலை சீராகும் வரை அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.

அலுவலகத்திற்கு வராத அந்த அதிகாரிகள் / ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள். அவர்கள் தொலைபேசி மற்றும் பிற மின்னணு தொடர்பு வழிகளில் அனைத்து நேரங்களிலும் தொடர்பு கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முடிந்த வரை அனைத்து சந்திப்புகளும் விடியோ கான்ஃபிரன்சிங் மூலம் நடக்க வெண்டும் என்றும் மிகவும் அவசியமானதாக இல்லாத வரை வெளியிலிருந்து வருவோருடனான சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவுறுத்தல்கள் ஜூன் 16 முதல் ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும். பயோமெட்ரிக் வருகை பதிவு தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என்றும், மேலும் உத்தரவு வரும் வரை வருகை பதிவேடுகள் மூலம் பணியாளர் வருகை பதிவு நடக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: Government Employees: உங்கள் பெற்றோர், குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்பட்டால் 15 நாட்களுக்கான விடுப்பு கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News