பெங்களூரு:காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகள் நேற்று இரவு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே உள்ள மண்டியாவிலும் போராட்டம் தொடங்கியது.
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ தர்ஷன் புட்டனையாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க, கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.
தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரும் தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வழக்கமாக பெய்யும் பருவமழையின் அடிப்படையில், தீர்ப்பாயத்தின் உத்தரவு அமைந்துள்ளதாகவும், ஆனால் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட மிகக்குறைவு என்று கர்நாடகா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பருவமழைக் குறைவால் நீர்த்தேக்கங்கள் காலியாகி, குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால், தண்ணீர் திறந்து விட முடியாது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
"எங்கள் வழக்கறிஞர் குழுவை சந்திக்க நாளை டெல்லி செல்கிறேன். (காவிரி நீர் தொடர்பான தமிழகத்தின் மனு மீதான) விசாரணை வெள்ளிக்கிழமை வருகிறது. தமிழகம் 24-25 டிஎம்சி கேட்ட பிறகு எங்கள் துறை அதிகாரிகள் நன்றாக வாதிட்டனர். நாங்கள் சொன்னோம். 3,000 கனஅடி வீதம் கொடுக்க முடியும்” என்று மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
"மாநிலத்தின் நிலையை நீதிமன்றத்திற்குப் புரியவைத்து,தமிழகத்திற்குத் திறந்துவிடப்படும் தண்ணீரை எவ்வளவு குறைக்கலாம் என்று ஆலோசிப்போம். சாவியை மற்றவர்களிடம் ஒப்படைக்க நாங்கள் விரும்பவில்லை. தற்போது சாவி எங்களிடம் உள்ளது. எங்கள் மாநில விவசாயிகளை நாங்கள் தான் பாதுகாக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக பல தசாப்தங்களாக கர்நாடக மாநிலம் முரண்டு பிடித்து வருவதும், அவ்வப்போது இந்த பிரச்சனை பூதாகரமாவது வழக்கமாகிவிட்டது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பிரச்சனையை தீர்க்க 1990ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ