ஆப்கானிஸ்தான் மீதான G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்..!!!

ஜி20 உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) தாலிபான் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து  ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2021, 10:34 AM IST
ஆப்கானிஸ்தான் மீதான G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்..!!! title=

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் மாஸ்கோவில் நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இதில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளார். இது மிக முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி20 உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) தாலிபான் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து  ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபான்கள் முனாதாக அளித்த வாக்குறுதியின் படி ஆப்கானிஸ்தானில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமை அங்கே தலை கீழாக உள்ளது. 

பெண்கள் வேலைக்குச் செல்ல கூடாது என்று தலிபான் (Taliban) அரசு வெளிப்படையாகவே அறிவித்துவிட்டதோடு, அந்நாடில் வாழும் சிறுபான்மையினர் விஷயத்தில் தலிபான் அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. அங்கு வாழும் சிறுபான்மையினரை தாக்கும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. இதை அடுத்து இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. 

ALSO READ| Coal Crisis: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய கூட்டம்..!!!

"இத்தாலிய அதிபரின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 12 ஆம் தேதி  அன்று ஆப்கானிஸ்தான் தொடர்பாக விவாதிக்க, மிக முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் மெய்நிகர் வடிவத்தில் பங்கேற்பார்" என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜி 20 உலகின் 20 முக்கிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கியது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ நாடுகள் இணைந்த‌ பொருளிய‌ல் கூட்ட‌மைப்பு ஆகும். 

ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி-20 மாநாடு, சர்வதேச நிதியம், உலக வங்கி,  ஆகியவற்றின் கூட்டங்களில் பங்கேற்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman)நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா... மத்திய அரசு கூறுவது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News