இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தின் மீது எப்பொழுதும் தேசிய கட்சிகளுக்கு ஒரு பார்வை இருக்கும். மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் கொண்ட உ.பி.யில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் பெரும்பான்மையை நிருபிக்க மற்றும் ஆட்சி அமைக்கும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநிலக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மெகா கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது எனக்கூறி பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கிறது.
இதனால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் தனித்து களம் காண்கிறது. இந்தநிலையில் அரசியலில் நுழைந்த பிரியங்கா காந்தி, கடந்த சனவரி 23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த மாதம் முதல் மக்களவை தேர்தல் தொடங்க உள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடபட்டு வருகின்றனர். அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி "கங்கை நதி யாத்திரை" மேற்கொள்கிறார். மூன்று நாட்கள் பயணமாக 140 கி.மீ தூரம் நதிக்கரை ஓரமாக வாழும் கிராம மக்களை சந்தித்து பேச உள்ளார். அவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.
Priyanka Gandhi Vadra at Triveni Sangam, to start 3-day long 'Ganga-yatra' from Chhatnag in Prayagraj to Assi Ghat in Varanasi, today. pic.twitter.com/A6gjtbod33
— ANI UP (@ANINewsUP) 18 மார்ச், 2019
அதுக்குறித்து உத்தரபிரதேச மக்களுக்கு கடிதம் ஒன்றை பிரியங்கா காந்தி எழுதியுள்ளார். அதில், மக்களின் ஆதரவே முக்கியம். உங்கள் ஆதரவுடன் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த ஆட்சியில்(பாஜக) இளைஞர்களுக்கு வேலை இல்லை, பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லை, விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.
உங்கள் பிரச்சனைகளையும் வலிகளையும் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். மக்களின் பிரச்சனைகளையும் வலிகளையும் தீர்க்காமல் அரசியலில் மாற்றம் கொண்டுவர முடியாது. எனவே உங்களிடம் பேச உங்கள் வீட்டுக்கே நேரடியாக வருகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வோம். மாற்றத்தை நோக்கி நோக்கி நாம் நகர்வோம்.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.