Alert: இந்த மாநிலத்தில் இனி Helmet போடாமல் வண்டி ஓட்டினால் 3 மாதத்துக்கு Driving License Suspend ஆகும்!!

ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தால் இனி ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் 3 மாதத்திற்கு பயன்படுத்த முடியாமல் போகலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 12:32 PM IST
  • கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களது ஓட்டுநர் உரிமங்கள் 3 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும்.
  • புதிய உத்தரவுகளின்படி, நான்கு வயதுக்கு மேற்பட்ட இரு சக்கர வாகன பயணிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாகும்.
  • மக்கள் வாகனங்களில் செல்லும்போது தங்கள் பாதுகப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
Alert: இந்த மாநிலத்தில் இனி Helmet போடாமல் வண்டி ஓட்டினால் 3 மாதத்துக்கு Driving License Suspend ஆகும்!! title=

பெங்களூரு: ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தால் இனி ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் 3 மாதத்திற்கு பயன்படுத்த முடியாமல் போகலாம். கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களது ஓட்டுநர் உரிமங்கள் 3 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும்.

கர்நாடகாவின் (Karnataka) போக்குவரத்துத் துறை, இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவருக்கும் ஹெல்மெட்டை கட்டாயமாக்கியுள்ளதுடன், இணங்காதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மூன்று மாதம் இடைநீக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

"புதிய உத்தரவுகளின்படி, நான்கு வயதுக்கு மேற்பட்ட இரு சக்கர வாகன பயணிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாகும். விதிமீறல் ஏற்பட்டால் அபராதத்துடன் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இடைநீக்கம் செய்யப்ப்படும் என மாநில அரசு கூறியுள்ளது" என்று கர்நாடகாவின் மாநில போக்குவரத்துத் துறை, தனது உத்தரவில் கூறியது.

ALSO READ: இனி ரயில்களில் இருக்காது pantry car, அந்த இடத்தில் என்ன இருக்கும் தெரியுமா?

வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக பழைய விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாநில போக்குவரத்துத் துறையும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விதிப்படி, மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் (Motor Vehicles Act) கீழ், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்.

கர்நாடக மோட்டார் வாகன விதிப்படி, மாநிலத்தில் ஹெல்மெட் அணிவது அனைத்து பைக் ஓட்டுநர்களுக்கும் கட்டாயமாகும்.

மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைத்து நபர்களுக்கும் கட்டாய ஹெல்மெட் அணியும் விதிமுறையை கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாநில சாலை பாதுகாப்புக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த புதிய உத்தரவு வந்துள்ளது.

மக்கள் வாகனங்களில் செல்லும்போது தங்கள் பாதுகப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும். இதை சட்டமாகக் கொண்டு வந்தால் தான் பலர் இதை பின்பற்றுகிறார்கள். அப்படியில்லாமல், நாம் எச்சரிக்கையுடன் இருந்தால், அது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

ALSO READ: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை: மத்திய அரசு திட்டம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News