பதுங்கிப் பாய்கிறதா கொரோனா? ஒரே பள்ளியைச் சேர்ந்த 22 குழந்தைகளுக்கு தொற்று உறுதி

 செயின்ட் ஜோசப் பள்ளியில் 22 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுளது. இதில், நான்கு குழந்தைகள் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2021, 06:46 PM IST
பதுங்கிப் பாய்கிறதா கொரோனா? ஒரே பள்ளியைச் சேர்ந்த 22 குழந்தைகளுக்கு தொற்று உறுதி title=

மும்பை: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்ததால், மக்கள் பல இடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆனால், நாளுக்கு நாள் அஜாக்கிரதையும் அதிகரிப்பது தான் அச்சத்தை தருகிறது.

இயல்பு நிலைக்கு நாடே திரும்பி வருவதால், பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளும் (Schools) திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், மும்பையில் இருந்து அச்சத்தை உண்டுபண்ணும் செய்தி ஒன்று வந்துள்ளது. 

மும்பையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் 22 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுளது. இதில், நான்கு குழந்தைகள் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் நிலைமை இன்னும் மேம்படவில்லை

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று (Coronavirus) பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. 

ALSO READ: அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா மூன்றாம் அலை, இலக்கில் குழந்தைகள்: நிபுணர் குழு எச்சரிக்கை

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகியவை மாநிலங்களில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை உள்ளது. நாட்டில் மொத்தமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில், கேரளாவில் 51% பேர், மகாராஷ்டிராவில் 16% பேர் மற்றும் மீதமுள்ள 3 மாநிலங்களில் (கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா) 4% -5% பேர் உள்ளனர்.

முன்னதாக, அக்டோபர் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்றினுடைய மூன்றாவது அலையின் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்கும் என்று உள்துறை அமைச்சக நிபுணர் குழு பிரதமர் அலுவலகத்தை எச்சரித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தால் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NIDM) கீழ் அமைக்கப்பட்ட நிபுணர்களின் குழு, கோவிட் -19-ன் (COVID-19) மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும், என்றும், பெரியவர்களைப் போல, குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும் மேலும் கூறியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள குழந்தை மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை என்பதை எடுத்துக்காட்டிய நிபுணர் குழு, மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

ALSO READ:Covid-19 Alert: மூன்றாவது அலை தொடங்கியதா? 2 நாட்களில் இரட்டிப்பானது தொற்று பரவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News