சமூக ஊடகங்கள் மனிதகுலத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜூன் 30 அன்று சமூக ஊடகங்கள் மனிதகுலத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். உலக சமூக ஊடக தினத்தன்று, போலி செய்திகளையும் தவறான தகவல்களையும் பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், இன்று உலக சமூக ஊடக தினம் கொண்டாடப்படுகிறது என்று சுட்டிகாட்டிய அவர், சமூக வலைதளங்கள் நல்ல விஷங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அது நிச்சயாக தவறான வழியில் பயன்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள மம்தா, யாராலும் அபாயகரமான போலி செய்திகள் மற்றும் தவறான செய்திகள் பகிரப்படக்கூடாது எனவும் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Today is World #SocialMediaDay. Social media should be used for the good of mankind. It must not misused by anyone to spread dangerous #fakenews and misinformation
— Mamata Banerjee (@MamataOfficial) June 30, 2019