அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோயிலின் வரைபடத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும். ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் சனிக்கிழமை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சென்று கோவில் கட்டுமானத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபடத்தை சமர்ப்பித்தனர். இதனுடன், வரைபடத்தின் ஒப்புதலுக்காக 65 ஆயிரம் ரூபாய் கட்டணமும் டெபாசிட் செய்யப்பட்டது.
அறங்காவலர் டாக்டர் அனில் மிஸ்ரா தனது சகாக்களுடன் சனிக்கிழமை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்று, கோவில் வரைபடம் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்து விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரினார். ஆவணங்களை ஆராய்ந்தவுடன் வரைபடங்களுக்கு விரைவில் ஒப்புல வழங்கப்படும் என்று அதிகார சபையின் துணைத் தலைவரும் செயலாளரும் உறுதியளித்தனர்.
ALSO READ | ஸ்ரீராமர் கோயில் காலம் கடந்து நிற்க நுட்பத்தை சொல்கிறது சென்னை IIT...!!!
குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயிலை புனரமைப்பதில் முக்கிய பங்கு வகித்த பிரபல கட்டிடக் கலைஞர் சோம்புரா குடும்பத்தினர் ஸ்ரீ ராமர் கோயிலை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் கட்டுமானத்தில் பங்கேற்க 10 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. இறுதியாக, கோயிலின் கட்டுமானத்தை மேற்பார்வையிட நொய்டாவின் கம்பெனி டிஸைன் அசோசியேட்ஸ் மற்றும் அகமதாபாத்தின் ஷிலானியாஸ் டிஸைன் கம்பெனி ஆகியவை ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டன.
ALSO READ | ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்… உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்!!