Nagrota encounter: மசூத் அஸார் சகோதரர் உத்தரவை நிறைவேற்ற வந்த பயங்கரவாதிகள்..!!!

நக்ரோட்டா எண்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளும், மெய்லானா மசூத் அசாரின் சகோதரரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு தாக்குதல் நடத்த வந்திருந்தனர் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2020, 12:09 PM IST
  • நக்ரோட்டா எண்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளும், மெய்லானா மசூத் அசாரின் சகோதரரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு தாக்குதல் நடத்த வந்திருந்தனர்.
  • பயங்கரவாதிகளின் எண்கவுண்டர் தற்செயலாக நடக்கவில்லை.
  • இது உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையாகும்.
Nagrota encounter: மசூத் அஸார் சகோதரர் உத்தரவை நிறைவேற்ற வந்த பயங்கரவாதிகள்..!!! title=

ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா அருகே  வியாழக்கிழமை காலை கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகள், இந்தியாவில் மிக்கபெரிய தாக்குதல் நடத்த, அவர்களின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் முப்தி ரவூப் அஸ்கரின் உத்தரவை ஏற்றூக் கொண்டு நிறைவேற்ற வந்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக, அவரது சதித்திட்டத்தை நாட்டின் உளவுத் துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kashmir) பயங்கரவாதிகளின் எண்கவுண்டர் தற்செயலாக நடக்கவில்லை. இது உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையாகும். எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகள் ஒரு பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் தெரிவித்தன. குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) சாதனத்தின் மூலம் கிடைத்த தகவல்கள், மற்றும் நான்கு பயங்கரவாதிகளிடம் இருந்த மொபைல் போன்கள் ஆகியவை,  இவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பதை தெரிவிக்கின்றன. அதன் தற்போதைய தளபதி, மவுலானா மசூத் அசாரின் (Maulana Masood Azhar) சகோதரர் முப்தி ரவூப் அஸ்கருடன் இவர்கள் தொடர்பு கொண்டிருந்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதே அவர்களின் நோக்கம். மசூத் அசார் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்

பிரதமர் நரேந்திர மோடி, ( PM Narendra Modi) உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) , வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா மற்றும் இரண்டு உளவுத்துறை தலைவர்கள் முன்னிலையில், இந்த எண்கவுண்டர் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்  விளக்கமளித்தார்.

இதன் பின்னர், பிரதமர் மோடி, "பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது நான்கு பயங்கரவாதிகளை கொன்ற சம்பவம் மற்றும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் பேரழிவை ஏற்படுத்தும் சதி முயற்சிகள் மீண்டும் முறியடிக்கப்பட்டன. ' என ட்வீட் செய்தார்

பாதுகாப்புப் படையினரின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், 'எங்கள் பாதுகாப்புப் படைகள் மீண்டும் பெரும் துணிச்சலைக் காட்டியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் ஜனநாயகத்தை குறிவைக்கும் மற்றொரு சதித்திட்டத்தை நமது வீரர்கள் முறியடித்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவை ( India) குறிவைத்து பாகிஸ்தான் இப்போது எல்லை தாண்டி தற்கொலை குண்டுபடையினரை ஜெயிஷ்-ஈ-முகம்மது மூலம் அனுப்பி வருவதாக உளது துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏஜென்சிகள் ஜே.இ.எம். அமைத்திருந்த பாலகோட் பயங்கரவாத பயிற்சி மையத்தை கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா, வான் தாக்குதல் நடத்தி அழித்தது குறிப்பிடத்தக்கது.

நான்கு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் சம்பா செக்டாரிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்

ALSO READ | பாகிஸ்தானில்  கண்டுபிடிக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News