மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்ட மேலவை தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 எம்.எல்.ஏ.க்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏ.க்களும், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரசுக்கு 51 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 29 பேர் உள்ளனர். இதில் 40 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இதனால் அவர் மீது கட்சித் தாவல் தடைச்சட்டம் பாய வாய்ப்பில்லை எனவும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க | அதிகாரப் போட்டி! அரசியல் குழப்பம்! முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகுவாரா?
மகாராஷ்டிர மாநில அரசியலில் பரபரப்பு நிலவி வரும் சூழலில், கவுகாத்தியில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைப் போக்க மாநில அரசு எதுவும் செய்யவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் இருந்து வெள்ளத்தில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
#Assam #TMC unit leading a protest outside Radisson Blu, Guwahati against Assam government over hosting #Maharashtra MLAs amidst severe floods killing many in the state. #Assam TMC President Ripun Bora leading the protest @AITC4Assam @ripunbora pic.twitter.com/umsGuvHd2I
— Pooja Mehta (@pooja_news) June 23, 2022
வெள்ள நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த நெருக்கடிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இது சிவசேனாவின் உட்கட்சி பிரச்சனை என்றும் பாஜக கூறிவருகிறது
மேலும் படிக்க | 46-ஆ? 35-ஆ? உண்மை என்ன.. பாஜக பக்கம் சாய்ந்த 'அந்த' எம்எல்ஏக்களின் முழு பட்டியல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR