Unclaimed Amount In Banks: நாட்டின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் சுமார் ரூ .50,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது என்ற தகவலை அரசு நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மதிப்பிட்டின் படி, வங்கிகளில் ரூ .5,977 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகை மக்கள் வங்கிகளில் முதலீடு செய்த பின் அதனை மறந்து விட்ட தொகை, அல்லது கிளைம் செய்ய இயலாத காப்பீட்டு தொகை ஆகியவை அடங்கும்.
₹50,000 கோடி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களிடம் உள்ளது
மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பகவத் காரத், மார்ச் 31, 2020 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, நாட்டின் வங்கிகளில் உரிமை கோராத ரூ .24,356 கோடி தொகை உள்ளது. 2020 நிதியாண்டின் முடிவில், காப்பீட்டுக் பாலிஸியில் உரிமைகோரப்படாத தொகை ரூ .24,586 கோடியாக உள்ளது. இவை மொத்தம் 8.1 கோடி கணக்குகள் ஆகும். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கிகளில் உரிமை கோரப்படாத பணம், வைப்புத் தொகையாளர்களின் நலன்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்படலாம்.
ஒரு கணக்கிற்கு சராசரியாக 3000 ரூபாய்
சராசரியாக, ஒவ்வொரு கணக்கிலும் ரூ .3000 உள்ளது, அதை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அரசு வங்கிகளின் கணக்கில் சராசரி இருப்பு ரூ .3030 ஆகும், அதாவது எஸ்பிஐயில் ரூ .2,710, தனியார் வங்கிகளில் சராசரியாக ரூ .3,340 உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்த சராசரி தொகை ரூ .9,250 ஆகும். உரிமை கோரப்படாமல் உள்ள கணக்குகள் எண்ணிக்கை 6.6 லட்சம் கணக்குகள். சிறு நிதி வங்கிகளில் மிகக் குறைந்த அளவில் ரூ .654 என்ற அளவிலும், கிராமப்புற வங்கிகளின் சராசரியாக கணக்கு ஒன்றில் ரூ .1600 ஆகவும் உள்ளது.
இந்த பிரச்சனைக்கான காரணம்
காப்பீட்டைப் பொறுத்தவரை, பல பாலிசிதாரர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து முதிர்வுத் தொகையை கோராததால், அந்த தொகையை கோருவதில் சிக்கல் எப்போதும் இருந்து வருகிறது, அது பல ஆண்டுகளாக கோரப்படாமல் கிடக்கிறது. பல நேரங்களில் பாலிசிதாரரின் குடும்பத்தினருக்கு அவர் பாலிசி எடுத்தது கூட தெரியாது, அதனால் பாலிசிதாரரின் மரணம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால், அவர்கள் தொகையை கோரவில்லை. சில நேரங்களில் பாலிசிதாரர் பாலிசி ஆவணங்களை தவற விடுதல் அல்லது அவர் முதிர்வு தேதியை தவறவிட்டதன் காரணமாக பாலிஸி காலவதியாதல் காரணமாக இந்த சிக்கல் ஏற்படுகிறது.
ALSO READ | பென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; அடல் பென்ஷன் திட்டத்தில் ₹10,000 பென்ஷன் பெறலாம்
வங்கிகளைப் பொறுத்தவரை, வேறு இடம் மாறிச் செல்லும் போது, பலர் சிறு தொகை உள்ள வங்கி கணக்குகளை மூடாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். அதில் உரிமை கோர யாரும் இல்லை. மேலும், நியமனமின்றி கணக்குகள் அல்லது வைப்புத்தொகைகளில், வாரிசுகள் போதுமான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை அப்படியே வங்கிகளிடம் விட்டுவிடுவார்கள்.
அந்த பணத்தின் நிலை என்ன
இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் IRDAI விதிகளின்படி, ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசிதாரர்களிடம் 10 வருடங்களுக்கும் மேலாக க்ளைம் செய்யப்படாத தொகையை வைத்திருந்தால், அந்த தொகையை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்ற வேண்டும். கணக்கில் வைத்திருக்கும் உரிமை கோரப்படாத பணத்தை கணக்கு வைத்திருப்பவருக்கு அல்லது அவற்றுடன் தொடர்புடைய நாமினியை சென்றடைய உறுதியான நடவடிக்கைகளை வங்கிகள் அவ்வப்போது எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது.
ALSO READ:7th Pay Commission அதிர்ச்சி செய்தி: அடிப்படை சம்பள உயர்வு குறித்த எண்ணம் இல்லை - அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR