குழந்தைகளுக்கான தடுப்பூசி; ஜனவரி 1முதல் CoWIN செயலியில் முன் பதிவு தொடக்கம்..!!!

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பிரதமர், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வலியுறுத்தினார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 27, 2021, 02:55 PM IST
குழந்தைகளுக்கான தடுப்பூசி; ஜனவரி 1முதல் CoWIN செயலியில் முன் பதிவு தொடக்கம்..!!! title=

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பிரதமர், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வலியுறுத்தினார். 

மேலும், உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி (DNA Vaccine) இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்த பிரதமர் மோடி, இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடு பணி ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன் பதிவு செய்ய, ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. CoWIN செயலியில் தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ், அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10 முதல் தொடங்கும் எனவும் முன்னதகா பிரதமர் அறிவித்தார்.

நேற்று, நாட்டு மக்களிடம் ‘மன் கீ பாத்’ (Mann Ki Baat) மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி (PM Modi) , கொரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருவதாகவு, வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அரசு எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினார். பிரதமர் மோடி மேலும் கூறுகையில், இப்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரானையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் எனவும், ஒவ்வொருவரின் வீடுகளின் கதவையும் வைரஸ் தட்டுவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

ALSO READ | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!

புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும், தேவை ஏற்படுமானால், இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஒவ்வொரு மாநிலமும், தங்கள் பகுதிகளில் உள்ள நிலைமைக்கு ஏற்ப தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் எனவும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News