எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக களம் இறங்கும் மார்கரெட் ஆல்வா

Vice President Election 2022: எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2022, 05:52 PM IST
எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக களம் இறங்கும் மார்கரெட் ஆல்வா title=

தேசிய ஜனநாயக கூட்டணியை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, என்சிபி தலைவர் சரத் பவார் மார்கரெட் ஆல்வாவின் பெயரை அறிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ கட்சியின் டி.ராஜா, பினாய் விஸ்வம், சிவசேனாவின் சஞ்சய் ராவத், திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா, சமாஜவாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், ம.தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் டிஆர்எஸ் கே கேசவ ராவ்  ஆகியோர் கலந்து கொண்டனர். உள்ளிட்டோர்.

மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை அணுகியுள்ளோம் என்று சரத் பவார் கூறினார். குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் குறித்த கூட்ட்டம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவர் சில கூட்டங்களில் பிஸியாக இருந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர் சில நாட்களுக்கு முன்பு யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவை அறிவித்தார், விரைவில் மார்கரெட் ஆல்வாவுக்கு தனது ஆதரவை அறிவிப்பார்,” என்று பவார் கூறியதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | President of India: குடியரசுத் தலைவர் பெறும் சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) அன்று அல்வா வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர், NDA வேட்பாளராக இருப்பார் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்

மேலும் படிக்க | Presidential Election 2022: இதுவரை எத்தனை கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News