7வது ஊதியக்குழு சமீபத்திய செய்திகள்: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு சமீபத்தில் 3% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, தற்போது ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போகிறது. ஊழியர்களின் மற்ற 4 கொடுப்பனவுகளை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். இந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட உள்ளன. ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் உயரும். இத்துடன், ஊழியர்களுக்கு 3 மாத அரியர் தொகையும் கிடைக்கும்.
பயணப்படி மற்றும் நகர கொடுப்பனவும் அதிகரிக்கும்
அகவிலைப்படியில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு பின்னர், இப்போது ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்ஸ் ஆகியவை அதிகரிக்கப்படும். அகவிலைபப்டி உயர்வுக்குப் பிறகு, பயணப்படி மற்றும் நகர கொடுப்பனவு அதிகரிப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அதிர்ச்சி, ஜூலையில் டிஏ அதிகரிப்பு இருக்காதா
பணிக்கொடை அதிகரிக்கும்
இது தவிர, வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் அதிகரிக்கும். மத்திய ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை ஊதியம் மற்றும் டிஏவில் இருந்து கணக்கிடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி அதிகரிப்பால், பிஎஃப் மற்றும் பணிக்கொடை அதிகரிப்பது உறுதி.
பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஆதாயம் உண்டாகும்
அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி, பயணப் படியில் உறுதியான உயர்வு இருக்கும். ஒரே நேரத்தில் நான்கு கொடுப்பனவுகளில் ஏற்படும் அதிகரிப்பின் பலனை ஊழியர்கள் பெறலாம். கடந்த 9 மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் சுமை அதிகரிக்கும்
அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். மறுபுறம், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 9455.50 கோடி ரூபாய் சுமை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR