தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான டிக்கெட் விலை குறைப்பு!

காஷ்மீரிலிருந்து பயணிகள் பலர் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஸ்ரீநகர்-டெல்லி இடையேயான விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை ₹ 7000-மாக குறைத்துள்ளது ஏர் இந்தியா!

Last Updated : Aug 4, 2019, 04:04 PM IST
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான டிக்கெட் விலை குறைப்பு! title=

காஷ்மீரிலிருந்து பயணிகள் பலர் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஸ்ரீநகர்-டெல்லி இடையேயான விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை ₹ 7000-மாக குறைத்துள்ளது ஏர் இந்தியா!

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். மேலும் பாதுக்காப்பினை பலப்படுத்தும் விதமாக அதிக அளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரை விட்டு வெளியேறும் விமானப் பயணிகளுக்கு உதவும் வகையில் டிக்கெட் விலை குறைத்துள்ளது ஏர் இந்தியா.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்., "மாநில அரசு நிர்வாகம் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டதை அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 

இதனைக் கருத்தில் கொண்டு விமான ஒழுங்குமுறை, சிவில் ஏவியேஷன் இயக்குநரக தலைவர், தேவை ஏற்பட்டால் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமானங்களை இயக்கத் தயாராக இருக்கும்படியும் விமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பயணிகளுக்கு உதவும் வகையில் டிக்கெட் விலையைக் குறைக்கும்படி விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.

ஏர் இந்தியா நிர்வாகம் டிக்கெட் விலைக் குறைப்பை இன்றுமுதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

ஸ்ரீநகர்-டெல்லி வழித்தடத்திற்கான அதிகபட்ச கட்டணத்தை ரூ.9,500 லிருந்து ரூ.6.715 ஆகவும், டெல்லி-ஸ்ரீநகர் வழித்தடத்திற்கான கட்டணம் ரூ.6,899 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்புச் சலுகை வரும் ஆகஸ்ட் 15 வரை அமலில் இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.

Trending News