பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 5GB தரவு டிசம்பர் வரை இலவசமாக கிடைக்கும்!!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது Work@Home பிராட்பேண்ட் திட்டத்தின் வேலிடிட்டியை மீண்டும் டிசம்பர் 8 வரை நீட்டித்துள்ளது. Work@Home பிராட்பேண்ட் திட்டத்துடன், BSNL ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் கிடைக்கும் நாட்களையும் நீட்டித்துள்ளது. BSNL தனது சென்னை தளத்தில் ஒரு Work@Home திட்டத்தை வெளியிட்டுள்ளது.
அதில், அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்தைத் தவிர அனைத்து வட்டங்களிலும் Work@Home விளம்பர பிராட்பேண்ட் திட்டம் டிசம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. “Work@Home” விளம்பரகால பிராண்ட்பேன்ட் திட்டம் ஆரம்பத்தில் மார்ச் 19 ஆம் தேதி ஏப்ரல் 19 வரை ஒரு மாத செல்லுபடியாகும் வகையில் தொடங்கப்பட்டது. Work@Home பிராட்பேண்ட் திட்டம் அனைத்து பயனர்களுக்கும் ஒரு நாளைக்கு 5GB தரவை 10 Mbps வேகத்தில் வழங்குகிறது. ஒரு நாளில் 5GB தரவு தீர்ந்த பிறகு, வேகம் 1 Mbps வரை குறையும். இந்த திட்டம் இலவசம். இதற்கு நிறுவல் அல்லது பாதுகாப்பு வைப்பு தொகை எதுவும் தேவை இல்லை.
ALSO READ | WOW... இனி உங்கள் வாட்ச்-யை டெபிட் கார்டு-ஆக பயன்படுத்தலாம்... எப்படி?
இதற்கிடையில், டெலிகாம் டாக்கின் அறிக்கையின்படி, கொல்கத்தா, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் 300GB பிளான் CS337 என அழைக்கப்படும் ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலத்தையும் பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. இந்த திட்டம் முன்னதாக நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் செப்டம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த திட்டம் 40Mbps வரை வேகம் வழங்குகிறது, மேலும் இது 300GB வரை தரவுடன் வருகிறது. தரவு வரம்பு தீர்ந்தவுடன், பயனர்கள் 1Mbps வேகத்துடன் இணையத்தில் உலாவலாம். எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் STD குரல் அழைப்பையும் இந்த மாதாந்திர திட்டம் வழங்குகிறது.