BSNL பயனர்களுக்கு ₹.399 புதிய அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்!!

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது!!

Last Updated : Aug 15, 2020, 10:47 AM IST
BSNL பயனர்களுக்கு ₹.399 புதிய அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்!! title=

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது!!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தற்பொழுது புதிதாக ரூ.399 என்கிற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை தனது பட்டியலில் சேர்த்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் வாய்ஸ் கால் நன்மை மற்றும் டேட்டா நன்மை என இரண்டு நன்மைகளும் ஒட்டுமொத்தமாக 80 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் மற்ற வட்டாரங்களில் வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த இரு வட்டாரங்களில் ரூ. 399 மற்றும் ரூ. 1699 சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய ரூ. 399 பிரீபெயிட் சலுகை ஆகஸ்ட் 15 ஆம்  தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. BSNL சென்னை ரூ.399 மற்றும் ரூ.1699 சலுகை நீக்கப்படுவது குறித்த அறிவிப்பை தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ரூ.399 சலுகை பற்றிய தகவலும் இடம்பெற்று உள்ளது. BSNL-ளின் புதிய ரூ. 39 சலுகையில் தினமும் 1 GB டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கப்படுகிறது.

ALSO READ | ஆன்லைன் மருந்து விற்பனையை துவங்கியது அமேசான் நிறுவனம்!! 

இந்த சலுகையில் வழங்கப்படும் தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 Kp-யாக குறைக்கப்பட்டு விடும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளூர் மற்றும் வெளியூர் ரோமிங்களில் தினமும் 250 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். அதன்பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இலவச பிஎஸ்என்எல் காலர் ட்யூன், இலவச லோக்தூன் உள்ளடக்கத்தையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தை சி-டாப்அப், செல்ப் கேர் மற்றும் வெப் போர்டல் மூலம் ஆக்டிவேட் செய்யலாம். PLAN BSNL 399 என்பதை 123 என்கிற எண்ணிற்கு SMS செய்தும் ஆக்டிவேட் செய்யலாம். செல்ப் கேர் மூலம் ஆக்டிவேட் செய்தால் இலவச BSNL ட்யூன்களும், இலவச லோக்தூன் உள்ளடக்கமும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News