சிறுவயதில் உள்ளவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது பெரும்பாலான நேரத்தை இந்த திரைகளிலேயே தான் செலவிடுகின்றனர். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் திரை நேரத்தின் தீங்கான தாக்கங்கள் பற்றிய சான்றுகள் அதிகமாக இருந்தாலும், திரைகளுக்கு முன்னால் செலவிடும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினி பயன்படுத்துவது மட்டுமல்ல அதிக நேரம் தொலைக்காட்சியின் திரையை பார்த்து கொண்டிருப்பதும் உங்களுக்கு தீங்கையே ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | World Cancer Day 2023: புற்றுநோய் விழிப்புணர்வு நாள்! கவனிப்பு இடைவெளியை களைவோம்
நீண்ட நேரம் திரையை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
1) நீண்ட நேரம் திரையை பார்ப்பதால் கண் சிமிட்டும் வேகம் குறைகிறது, இதனால் கண்கள் வறட்சி மற்றும் தலைவலி ஏற்படும்.
2) அதிகப்படியான திரை நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும், இது உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.
3) திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி மெலடோனின் உற்பத்தியை அடக்கி, தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.
4) திரைகளில் அதிக நேரம் செலவிடுவது பிறருடனான தொடர்பை குறைக்கிறது மற்றும் தனிமை உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
5) திரைகளில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அறிவாற்றல் வளர்ச்சியில் குறைபாடு மற்றும் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
6) அதிகப்படியான திரை நேரம் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலக் கவலைகள் அதிகரிக்கும்.
7) நீண்டநேரம் திரையின் முன் அமர்ந்திருப்பது கார்பல் டன்னல் சிண்ட்ரோம் போன்ற மன அழுத்த நோய்களை ஏற்படுத்தும்.
திரை நேரத்தை குறைப்பதற்கான வழிகள்:
1) உங்கள் சாதனத்தில் திரை நேரத்தைக் கண்காணிக்கும் கருவிகளைப் பயன்படுத்தவும் அல்லது ஒவ்வொரு நாளும் உங்கள் சாதனத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தின் அளவை கட்டுப்படுத்த சில செயலிகளை டவுன்லோடு செய்யலாம்.
2) உங்கள் சாதனத்தை எப்போது பயன்படுத்துவீர்கள், எப்போது பயன்படுத்தாமல் இருப்பீர்கள் என்பதை பட்டியலிட்டு அட்டவணை உருவாக்கி அதற்கேற்ப கடைபிடிக்கவேண்டும்.
3) நீங்கள் சாப்பிடும் போது அல்லது உங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் போது உங்கள் சாதனத்தில் 'Do Not Disturb' என்கிற ஆப்ஷனை இயக்க வேண்டும்.
4) உங்கள் கண்களுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு கொடுங்கள், சில நிமிடங்கள் உங்கள் கண்களை திரையிலிருந்து விலக்கி வையுங்கள்.
5) திரையை அதிக நேரம் பயன்படுத்துவது தவிர வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது போன்ற செயல்பாடுகளை செய்யலாம்.
6) உணவி உண்ணும்போது அல்லது நீங்கள் படுக்கையில் இருக்கும் போது உங்கள் அருகில் இல்ல்லாதவறு சாதனத்தை தூரமாக தள்ளி வையுங்கள்.
மேலும் படிக்க | மலச்சிக்கலால் பிரச்சனையா? இந்த பழம் சாப்பிடுங்க, நிவாரணம் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ