வருமான வரி ஸ்லாப்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதே நேரத்தில், பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணமும் அளிக்கப்பட்டது. வருமான வரி வரம்பை 7 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக ஆண்டு வருமானம் ஏழு லட்சம் ரூபாய் உள்ளவர்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை. அரசாங்கம் வழங்கிய சலுகையின் காரணமாக இது சாத்தியமானது. வருமான வரிச் சட்டத்தின் 87A பிரிவின் கீழ் இந்த விலக்கு கிடைக்கும். 2013-2014 ஆம் ஆண்டில், இந்திய அரசின் மூலம் 87A பிரிவின் கீழ் வரிச்சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி முறையின் கீழ் இந்த வருமான வரி விலக்கில் மாற்றம் செய்வதாக அறிவித்தார். அதை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வருமான வரி ரிபேட் என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால், வருமான வரி ரிபேட் என்பது உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான (ரீஃபண்ட்) ஒரு வடிவமாகும். வருமான வரி (IT) துறை சில சூழ்நிலைகளில் இந்த ரீஃபண்ட் அல்லது விலக்கு அளிக்கிறது. வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டில் வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக வரி செலுத்தினால் வருமான வரி தள்ளுபடி பெறுவார்கள். வருமான வரி விலக்கு பெற, நீங்கள் உங்கள் வரியை சரியாகக் கணக்கிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | பாலிசிதாரர்கள் கவனத்திற்கு... எல்ஐசி வழங்கும் வாட்ஸ்அப் சேவை - முழு விவரம்!
பிரிவு 87A என்றால் என்ன?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 87A இன் விதிகளின் கீழ், இந்திய குடியுரிமை பெற்ற ஒரு நபரது மொத்த வருமானம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறாமல் இருந்தால், அவர் செலுத்த வேண்டிய வருமான வரியில் 100% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2022-23 நிதியாண்டு வரை, பிரிவு 87A இன் கீழ் விலக்கு கோருவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. அதாவது 2022-23 நிதியாண்டில், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று இருந்தது.
வரி விலக்கு
பிரிவு 87A இன் கீழ் விலக்கு கோருவதற்கான அதிகபட்ச வருமான வரம்பு அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட் 2019 இல், பிரிவு 87A இன் கீழ் விலக்கு கோருவதற்கு, நிகர வரி விதிக்கக்கூடிய வருமானத்தின் அதிகபட்ச வரம்பை 5 லட்சமாக அரசாங்கம் உயர்த்தியது. மத்திய பட்ஜெட் 2023 இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி வரம்பு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இது இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
வரி அடுக்கு
புதிய வரி விதிப்பில், விலக்கு வரம்பு தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், புதிய வரி முறையில், 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதாவது 2023-24 நிதியாண்டு முதல் இந்தியாவில் வசிக்கும், வரி செலுத்தும் தனி நபர்கள், ரூ. 7 லட்சத்துக்குள் இருக்கும் மொத்த வருமானத்தில் செலுத்த வேண்டிய வருமான வரியில் 100% வருமான வரி தள்ளுபடியைப் பெற (ரிபேட்) உரிமை பெறுவார்கள்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் பற்றிய முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ