வளம் தரும் துளசி செடி! ‘செய்ய வேண்டியது’ மற்றும் ‘செய்யக் கூடாதது’ என்ன..!!

இந்து மதத்தில் துளசி செடிக்கு (Tulsi Plant) சிறப்பான முக்கியத்துவம் உண்டு. மகாவிஷணுவிற்கு உகந்த துளசி செடி பெரும்பாலான வீடுகளில் இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 28, 2021, 12:41 PM IST
  • துளசி செடி காய்ந்திருந்தால், உடனே அகற்றி விட வேண்டும்
  • அமாவாசை, துவாதசி மற்றும் சதுர்த்தசி நாட்களில், துளசி இலைகளை பறிக்கக்கூடாது.
  • துளசி இலைகளை விநாயகப் பெருமானுக்கு சமர்பிக்க கூடாது
வளம் தரும் துளசி செடி! ‘செய்ய வேண்டியது’ மற்றும் ‘செய்யக் கூடாதது’ என்ன..!! title=

இந்து மதத்தில் துளசி செடிக்கு (Tulsi Plant) சிறப்பான முக்கியத்துவம் உண்டு. மகாவிஷணுவிற்கு உகந்த துளசி செடி பெரும்பாலான வீடுகளில் இருக்கும். துளசி செடிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தீபம் ஏற்றி, வழிபடும் பழக்கம் உள்ளது. இருப்பினும், துளசி செடியை எந்த திசையில் வீட்டில் வைக்க வேண்டும் உள்ளிட்ட சில முக்கிய விதிகள் அனைவருக்கு தெரிவதில்லை. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். 

துளசி செடியை வைக்க சரியான இடம்

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி செடி இந்து மதத்தில் மிக புனிதமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில் ஒரு துளசி செடி (Tulsi Plant) இருந்தால், அதை பால்கனியில் அல்லது வீட்டின் ஜன்னலின் அருகில் வைக்கப்பட வேண்டும். மேலும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் நடப்பட வேண்டும் என்று சொல்லுங்கள். தெய்வங்கள் இந்த திசைகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது என்பதால், இந்த திசையில் துளசி செடியை வைத்திருப்பது நல்லது.

ALSO READ | Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது

வீட்டில் துளசி செடியை நடுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

- கற்றாழை மற்றும் முட்கள் நிறைந்த செடிகளை ஒருபோதும் துளசியுடன் சேர்த்து வைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- அமாவாசை, துவாதசி மற்றும் சதுர்த்தசி நாட்களில், துளசி இலைகளை பறிக்கக்கூடாது. 

- ஞாயிற்றுக்கிழமைகளில் துளசிக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது. 

- ஞாயிற்றுக்கிழமைகளில் துளசி இலைகளை பறிக்கக்கூடாது 

- துளசி செடியை ஒருபோதும் நகத்தால் கிள்ளி எடுக்க க்கூடாது, மென்மையாக விரல்களால் பறிக்க வேண்டும்

- துளசி செடி காய்ந்திருந்தால், உடனே அகற்றி விட வேண்டும். ஏனெனில் காய்ந்த துளசி எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.

- துளசி செடி காய்ந்து போய் விட்டால், அதை தொட்டியிலிருந்து அகற்றி ஆற்றில் விடவும்.

- துளசி இலைகளை கடவுளுக்கு சமர்பிப்பது நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.

- துளசி இலைகளை விநாயகப் பெருமானுக்கு சமர்பிக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ALSO READ | வீட்டின் படிக்கட்டுகள், வாழ்க்கையின் படிக்கட்டுகளாகவும் இருக்க சில Tips!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News