Relationship Tips In Tamil: திருமணம் என்பது வாழ்வின் முக்கியமான காலகட்டமாகும். ஒருநாள் கிரிக்கெட்டை போல ஒருவரின் வாழ்க்கையை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரித்தால், நிச்சயம் திருமணத்திற்கு முந்தைய வாழ்வு முதல் இன்னிங்ஸ் என்றும் திருமணத்திற்கு பிந்தைய வாழ்வு இரண்டாவது இன்னிங்ஸ் என்றும் கண்டிப்பாக பிரிக்கலாம். நீங்கள் திருமணத்திற்கு முன்னர் உங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வழங்கி வருவீர்கள். ஆனால், திருமணத்திற்கு பின் நிச்சயம் உங்களின் பார்ட்னருக்கும் அதே முக்கியத்துவத்தை நீங்கள் வழங்கியாக வேண்டும்.
திருமண பந்தத்தை வாழ்க்கை முழுவதும் சிறப்பாக கொண்டுசெல்வதற்கு இணையர்கள் இருவருக்குமே முக்கிய பொறுப்பு உள்ளது. அதிலும் திருமண உறவுக்கு அதன் ஆரம்ப காலகட்டம் என்பதும் முக்கியமாகும். நீங்கள் திருமண உறவின் ஆரம்பத்தில் செய்த செயல்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்றாகும். அது உங்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்துவிடும். எனவே, தம்பதிகள் தங்களின் திருமண உறவின் ஆரம்ப காலகட்டத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி திருமண உறவின் ஆரம்ப கட்டத்தில், அதாவது பெரிதாக இருவருக்கும் இடையே புரிதல் ஏற்படாத, அனுபவம் இல்லாத வேளையில் சில தவறுகளை தவிர்ப்பதன் மூலம் அடுத்தடுத்து ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகளை தவிர்க்க முடியும். திருமண உறவில் மகிழ்ச்சியே முதன்மையான ஒன்றாகும். பிரச்னைகள் வருவது இயல்பு என்றாலும் தேவையற்ற பிரச்னைகள் அல்லது அனுபவமின்மையால் ஏற்படும் தவறுகளால் வரும் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லதுதான்.
அந்த வகையில் புதுமண தம்பதிகள் (Newly Married Husband And Wife) தங்களின் திருமண உறவின் தொடக்கத்தில் பார்ட்னரிடம் இந்த 5 தவறுகளை செய்யாமல் தவிர்க்க வேண்டும். இவற்றை கணவன்/மனைவி தங்களின் பார்ட்னரிடம் தவிர்ப்பதன் மூலம் புரிதல் அதிகமாகும், இருவருக்குமான உறவும் பலமாகும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
ஒப்பிடவே கூடாது
திருமணமான புதிதில் கணவன்/மனைவி தங்களின் பார்ட்னரை வேறொரு உறவுக்காரர்கள் உடனோ அல்லது வேறு யாருடனோ ஒப்பிடுவது தவறாகும். அதாவது, அண்ணியை போல் நீ ஏன் வீட்டு வேலைகளை செய்யவில்லை என கணவன், மனைவி நோக்கி கேட்பது தவறாகும். அதேபோல், உங்கள் அண்ணனை போல் ஏன் வீட்டிற்கு சீக்கிரம் வர மறுக்கிறீர்கள் என கேட்பதும் தவறாகும். இது எதிர்மறையான சிந்தனைக்கு இட்டுச்செல்லும். இது திருமண உறவை பலமிழக்கச் செய்யும்.
குடும்பங்களை ஒப்பிட கூடாது
என் குடும்பத்தினர் தான் உயர்ந்தவர்கள், எங்கள் குடும்பம் போல் நீங்கள் இல்லை என பிரித்து பேசி ஒப்பிடுவதும் தவறாகும். இது ஆரம்ப காலகட்டத்தில் உறவில் கசப்புணர்வை உண்டாக்கும். நீங்கள் பார்ட்னரின் குடும்பத்திடம் தென்படும் விஷயங்கள் குறித்து பேசலாம். ஆனால் அதனை உங்கள் குடும்பத்துடன் ஒப்பிட்டு பேசுவது சரியாகும்.
பிறர் குறை சொல்வதை கேட்காதீர்கள்
மற்றவர்கள் முகத்திற்கு பின்னாக சொல்லும் விஷயங்களை காது கொடுத்து கேட்காதீர்கள். வீட்டில் உங்களின் பார்ட்னர் குறித்து உங்களிடம் மறைமுகமாக ஏதாவது தவறை உங்களிடம் சொல்லலாம். அதனை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் உங்களின் பார்ட்னரிடம் அதுகுறித்து கலந்து பேசி புரிந்துகொள்ள முற்பட வேண்டும். அதைவிடுத்து, எடுத்த உடன் ஆத்திரப்பட்டால் ஆரம்பத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்படும். பிறர் சொல்லியதால் அவரை தவறாக புரிந்துகொள்ளாமல் தீர விசாரிப்பதே மெய் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ஓவர் பொசசிவ் ஆக இருக்காதீர்கள்
பொசசிவ் என்பது உறவில் தவிர்க்க இயலாதது என்பது பலரின் வாதம். இருப்பினும் திருமண வாழ்வில் நீங்கள் அளவுக்கு அதிகமாக பொசசிவ் ஆக இருந்தால் உங்கள் பார்ட்னருக்கு அசௌகரியம் கூட உண்டாகலாம். இதனால் அவர் உங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை கடைபிடிக்க நினைக்கலாம். அவருக்கும் இடம் கொடுத்து, சுதந்திரமாக செயல்படவிட்டால்தான் நம்பிக்கை பிறக்கும்.
கருத்தை திணிக்காதீர்கள்
உங்களுடைய எண்ணத்தையும், நீங்கள் விரும்பியதையும் மட்டுமே உங்களின் பார்ட்னர் செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள். உங்கள் பார்ட்னர் சொல்வதையும் காது கொடுத்து கேளுங்கள். அப்போதுதான் இருவருக்கும் நல்ல புரிதல் உண்டாகும். கருத்து வேறுபாட்டையும் தவிர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | அடம்பிடிக்கும் அடாவடி குழந்தைகளை சமாளிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ