உலகத்தையே குப்பையாகும் கழிவுப் பொருட்கள்: அச்சத்தில் அன்னை பூமி

நவீன தொழில்நுட்பங்களும், பொருட்களும் நமக்கு வசதியை அதிகரித்துக் கொடுக்கும் அதேவேளையில் அதற்கான விலையாக சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2022, 02:28 PM IST
  • அன்னை பூமியை மதிப்போம்
  • அன்னை பூமிக்கு கொடுக்கும் பரிசு மாசற்ற பூமி
  • பூமித்தாயை வாழவைப்போம்
உலகத்தையே குப்பையாகும் கழிவுப் பொருட்கள்: அச்சத்தில் அன்னை பூமி title=

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் வகையில் உலகில் கழிவுகள் அதிகரித்து வருகிறது.  இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகில் உயிரினங்களின் வாழ்க்கையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். 

நவீன தொழில்நுட்பங்களும், பொருட்களும் நமக்கு வசதியை அதிகரித்துக் கொடுக்கும் அதேவேளையில் அதற்கான விலையாக சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. 

இன்று பெரும்பாலானவர்களின் வீட்டில் கணினி இருக்கிறது. கம்யூட்டர் தயாரிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுவது பிளாஸ்டிக் பொருட்கள். பிளாஸ்டிக்கை எரிக்கும் போது வெளிவரும் டயாக்சினால் ஆஸ்துமா உட்பட பல சுவாச நோய்கள் ஏற்படுகிறது. 

நமக்கு தேவையான பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாதரசம், பூமியிலும் நீரிலும் கலக்கும் போது மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் நச்சாக மாறுகிறது. 

மேலும் படிக்க | உலகின் அதிக சப்தமான நகரங்கள்! ஒலி மாசு தத்தெடுத்துக் கொண்ட ஊர்கள்

நாம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் வசதியைக் கொடுத்தாலும், அவற்றில் இருந்து உருவாகும் மின்குப்பைகளிலிருந்து காரீயம், குரோமியம், பெரிலியம், கேட்மியம், உள்ளிட்ட பல வேதி பொருட்கள் வெளிப்படுகின்றன. 
இவை அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, மனித உடலில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறுகளையும் பாதிக்கிறது.  

world

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சரியான சட்ட வழிகாட்டுதல்களும், முறையான திட்டமிடல்களும் தேவை. எனவே, பயன்படாத மின்னணு சாதனங்களை, மக்கும், மக்காத குப்பை என்று தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். 

சுற்றுச்சூழல் மாசுபாடு (Pollution) என்பது மனிதர்களாகிய நமது செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சீர்கேடு ஏற்படுவதைக் குறிக்கும். காற்று, நீர், மண் வளங்களும், பூமியில் வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாவதால் சுற்றுப்புறச் சூழல் சீரற்றுப் போகிறது.

சுற்றுச்சூழல் மாசு என்பது சில வேதியியல் பொருட்களாகவும், வெப்ப மாசு, ஒளி மாசு, ஒலி மாசு என பல வகைப்படுகிறது. பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது. அவற்றில் சில ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

மருத்துவக் கழிவுகள்
பாகிஸ்தானின் கராச்சி நகரின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான கிளிஃப்டன் கடற்கரையில், சிரிஞ்ச்கள் மற்றும் இரத்தக் குப்பிகள் என மருத்துவக் கழிவுகள் சிதறிக் கிடந்தன.

world

மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல்கள் விடப்படுள்ள நிலையில் கடற்கரையை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படி மருத்துவக் கழிவுகளை பொறுப்பில்லாமல் வீசிய, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விண்வெளி குப்பை

பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள் இதர விண்கலங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா கூறுகிறது. விண்வெளியில் இருக்கும் குப்பைகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான நகரும் குப்பைகளைக் கண்காணிக்கிறது.

space

சிறிய அளவிலான விண்வெளிக் குப்பைகள், பெரிய சேதமடையாத பொருட்களுடன் இணைந்து 'கெஸ்லர் சிண்ட்ரோம்' ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள், விண்வெளி குப்பைகளை அழிப்பதும் சுலபமானதல்ல. 

பொலிவியாவில் ரயில்கள்
தென்கிழக்கு பொலிவியாவில் உயுனி அருகே உள்ள ரயில் கல்லறையில் டஜன் கணக்கான நீராவி ரயில்கள் துருப்பிடித்துப் போய் கிடக்கின்றன. அந்நாட்டில் 1940 களில் சுரங்கத் தொழிலின் வீழ்ச்சிக்குப் பிறகு காலியாக உள்ள பழைய ரயில்கள் பார்ப்பதற்கே வித்தியாசமானதாக இருக்கிறது.  

world
(புகைப்படம்: AFP)

E-graveyards
கானா முதல் சீனா வரை, பழைய கணினிகள் போன்ற மின்னணு கழிவுகள் டன் கணக்கில் மின்னணு கழிவு கிடங்குகளில் (E-graveyards) கொட்டப்படுகின்றன. இதில் உலோகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அதிகமானது. 
 world

கடலில் பட்டாசுகள்

ஓஷன் ப்ளூ திட்டத்தின் படி, ஜூலை மாதம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள 26 மைல் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 2,000 கிலோ பிளாஸ்டிக் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.

விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பட்டாசுகளில் இருந்து வரும் ரசாயனங்கள் நீர்நிலைகளை மாசுபடுத்தும் என்பது உட்பட பட்டாசுகள் தொடர்பான அச்சங்களை பகிர்ந்துள்ளனர். 

நைக் காலணி 
நைக் காலணி உலகெங்கிலும் கரையோரங்களில் ஒதுங்கிக் கிடப்பதை காணமுடிகிறது, கடந்த ஆண்டு அட்லாண்டிக்கில் உள்ள தொலைதூர புளோரஸ் தீவில் 60 நைக் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆராய்ச்சியின் படி, காலணிகள் ஒரு கப்பலில் இருந்து விழுந்த 70க்கும் அதிகமான கொள்கலன்களில் இருந்து வந்திருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் அனுப்பப்படும் 218 மில்லியன் கொள்கலன்களில், 1,500 க்கும் மேற்பட்டவை கப்பலில் விழுகின்றன என்று உலக கப்பல் கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா; ஆய்வு கூறுவது என்ன!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News