ஆஸ்திரேலியாவில் அதிகமாக உடல் தெரியும்படி குறைவான ஆடை அணிந்திருந்த பெண்ணை விமான நிறுவனம் தங்களை விமானத்தில் ஏற்ற மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அதிகமாக உடல் தெரியும்படி குறைவான ஆடை அணிந்திருந்த பெண்ணை விமான நிறுவனம் தங்களை விமானத்தில் ஏற்ற மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் (Australia) சேர்ந்த 23 வயது பெண்மணி கேத்ரீன் பேம்டன் (Catherine Bampton). இவர் கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியாவின் Adelaide பகுதியிலிருந்து Gold Coast பகுதிக்குச் செல்ல Virgin Australia விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதன் படி அவர் விமான நிலைய வழிமுறைகளைக் கையாண்டு விமானத்தில் ஏறுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
ALSO READ | Viral: இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..!
அப்பொழுது விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கேத்ரீனிடம் வந்து கேத்ரீன் அதிகமாக உடல் தெரியும்படி குறைவான ஆடைகளை அணிந்திருக்கிறார். அதனால் அவரை விமானத்திற்குள் ஏற அனுமதிக்க முடியாது. கேத்ரீன் வேறு மேலாடையை அணிந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு குழப்பத்தில் மூழ்கிய கேத்ரீன் விமான டிக்கெட் பதிவு செய்யப்படும் போது ஆடை கட்டுப்பாடுகள் குறித்து எந்த வித விதிமுறைகளும் இல்லை என வாதாடியுள்ளார்.
இருப்பினும், விமான நிறுவன ஊழியர்கள் அவரை விமானத்திற்கு ஏற அனுமதிக்கவில்லை. இந்த புதிய சட்டத்தைக் கேட்டு மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துகேத்ரீன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விமான பயணத்தின் போது தான் அணிந்திருந்த ஆடையுடன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR