உடல் எடையை குறைக்க யோகா: யோகா உடலை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் ஆரோக்கியமாக்குகிறது. முழு உடலையும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள பலர் தினமும் யோகா (Yoga) செய்கிறார்கள். யோகா உடலை கட்டுக்கோப்பாக மாற்றுகிறது, உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது, உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் உள் அமைதியையும் அளிக்கிறது. நீங்கள் ஓவர் வெயிட்டால் தொந்தரவு ஏற்பட்டால், அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க யோகா செய்யலாம். உடல் எடையைக் குறைப்பதில் நல்ல பலனைக் காட்டுவதைத் தவிர, உடல் நோய்களிலிருந்து விடுபடவும் யோகா பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்க என்ன யோகாசனங்களை (Yoga Asanas) செய்யலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
எடை இழப்புக்கான யோகா | Yoga For Weight Loss
தனுராசனம்: தனுராசனம் ஒரு யோகா ஆசனம், இது முழு உடலின் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், குறிப்பாக தொப்பை கொழுப்பைக் கரைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், கைகள் மற்றும் கால்களில் இருந்து கொழுப்பு அகற்றப்படுகிறது. தனுராசனம் செய்ய, முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். பின் கால்கள் இரண்டையும், முதுகை நோக்கி மடிக்க வேண்டும். பின்பு இரண்டு கைகளால் கணுக்கால்களை பிடிக்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தலை, மார்பு, தொடை ஆகிய பகுதிகளை ஒன்றாக மேலே உயர்த்தி, உடலை வில் போன்று வளைக்க வேண்டும். 20-30 நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு பழைய நிலைக்கு வர வேண்டும். இந்த ஆசனத்தை 3-4 தடவை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | காலை அல்லது மாலை? காபி குடிக்க சரியான சிறந்த நேரம் எது?
உத்கடாசனம்: உத்கடாசனம் நாற்காலி போஸ் (Chair Pose) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் பெயரைப் போலவே, இந்த யோகா ஆசனத்தைச் செய்யும்போது, உடலை நாற்காலி வடிவில் வடிவமைக்க வேண்டும். இதற்கு முதலில் நாற்காலியில் நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்க கால்களை இடுப்பு தூரத்திற்கு வைக்க வேண்டும். உங்க கைகளை மடியில் வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு செங்கல்லை எடுத்து முன்னாடி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்க பாதத்தை செங்கல் மீது வையுங்கள். உங்க பாதங்கள் முழங்காலுக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்து உங்க கைகளை கூப்பி நமஸ்காரம் முத்திரையின் வைக்க வேண்டும். இப்பொழுது மூச்சை வெளியே விட்டு உங்க உடலை இடது பக்கமாக திருப்புங்கள். வலது முழங்கை ஆனது இடது முழங்காலுக்கு அருகில் வைக்க வேண்டும். உங்க உள்ளங்கைகள் மார்பின் முன் இருக்க வேண்டும். இதே நிலையில் 10-15 நிமிடங்கள் இருந்து மூச்சை உள்ளே மற்றும் வெளியே இழுத்து விடுங்கள். இதே மாதிரி மறுபக்கமும் செய்யுங்கள்.
புஜங்காசனம்: புஜங்காசனம் கோப்ரா போஸ் (Cobra Pose) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகாசனம் செய்ய, முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்க வேண்டும். பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரண்டு புறமும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை மேலே உயர்த்தி, பின்னோக்கி வளைய வேண்டும். விரைவான எடை இழப்புக்கு இந்த யோகாசனத்தை செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எடை குறைப்பு முதல் செரிமானம் வரை.. இந்த மேஜிக் மூலிகைகள் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ