பிரபல நடிகைக்கும் வினய்க்கும் திருமணம்?

உன்னாலே உன்னாலே வினய் டாக்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2022, 02:43 PM IST
  • நடிகை வினய்க்கு திருமணம்
  • ஆஸ்திரேலிய நடிகையை மணக்கிறார்
  • விமலா ராமன் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்றவர்
பிரபல நடிகைக்கும் வினய்க்கும் திருமணம்? title=

நடிகர் வினய்க்கும் நடிகை விமலா ராமனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வினய். அதன் பிறகு அவர் நடித்த ஜெயங்கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் தொடர்ந்து அவர் நடித்த மோதி விளையாடு, மிரட்டல் உள்ளிட்ட படங்கள் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. 

இதனால் கோலிவுட்டின் அடுத்த சாக்லேட் பாயாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வினய் ஹீரோ என்ற இமேஜிலிருந்து விலகி ஹீரோவுக்கு நண்பராக நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த என்றென்றும் புன்னகை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் வினய்யின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.இதனையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.  அவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனால் வில்லன் ரூட்டிலேயே வினய் பயணம் செய்ய ஆரம்பித்தார்.

மேலும் படிக்க | அட இத கவனிக்காம விட்டாச்சே! பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் சமந்தா?

அதன்படி கடந்தாண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் வில்லனாக நடித்த வினய் தனது ஆர்ப்பாட்டம் இல்லாத வில்லத்தனத்தால் கோலிவுட்டின் வாண்டட் வில்லனாக மாறினார். அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றினார். தற்போது அவர் சூர்யா தயாரிப்பில் அருண் விஜய்யும், அவரது மகன் அர்னவ்வும் நடிக்கும் ‘ஓ மை டாக்’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்தச் சூழலில் வினய் நடிகை விமலா ராமனை காதலித்துவருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெளிநாடுக்கு ஒன்றாக சென்ற புகைப்படமும் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிகளவு பகிரப்பட்டது.

Vimala Raman

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தனது 100ஆவது படமான ‘பொய்’ படத்தின் மூலம் விமலாராமனை நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், 2008ஆம் ஆண்டு சேரனுடன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக அவர் சுந்தர். சியின் இருட்டு படத்தில் நடித்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்த விமலா ராமன் தற்போது, மலையாளம் மற்றும் தமிழில் உருவாகிவரும் கிராண்ட்மா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | HBDRashmikaMandanna:ராஷ்மிகா மந்தனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News