கேன்ஸ் பட விழா: சூட்கேஸைத் தொலைத்த நடிகை பூஜா ஹெக்டே- என்ன நடந்தது?

நடிகை பூஜா ஹெக்டே கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்ள எடுத்துச் சென்ற உடைகள், மேக்கப் கிட்கள் அடங்கிய சூட்கேஸ் மாயம் ஆகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 22, 2022, 06:46 PM IST
  • நடிகை பூஜா ஹெக்டே கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாகக் கலந்துகொண்டார்.
  • படவிழாவுக்கு அவர் கொண்டுசென்ற உடைகள், மேக்கப் கிட்கள் அடங்கிய சூட்கேஸ் மாயம்.
  • உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பூஜா ஹெக்டே.
கேன்ஸ் பட விழா: சூட்கேஸைத் தொலைத்த நடிகை பூஜா ஹெக்டே- என்ன நடந்தது? title=

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக ரன்வீர் சிங் நடிக்கும் சர்க்கஸ் படத்தில் நடித்துவருகிறார்.

 இதனிடையே கேன்ஸ் திரைப்பட விழாவிலும் ரெட் கார்பெட் நிகழ்வில் பூஜா கலந்துகொண்டார். கேன்ஸ் விழாவில் அவர் கலந்துகொள்வது இதுதான் முதன்முறை. இந்நிலையில் அவ்விழாவில் சில சிக்கல்களையும் சந்தித்துள்ளார் பூஜா. 

அதாவது நிகழ்ச்சியில் அவர் அணிவதற்குத் தேவையான விலை உயர்ந்த ஆடைகள், நகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அவர் புறப்பட்டுள்ளார்.

                           

ஆனால் பாரீஸுக்கு வந்து பார்த்த பிறகுதான் அவரது ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது தெரியவந்துள்ளது. நல்லவேளையாக அவர் எடுத்துவந்த விலை உயர்ந்த நகைகள் அவரிடம் பத்திரமாக இருந்ததாம்.

மேலும் படிக்க | விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடல் புகழ் பாடகி சங்கீதா காலமானார்!

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நேரம் பார்த்து இப்படி சூட்கேஸ் தொலைந்ததால் பூஜா மட்டுமல்லாது அவரது உதவியாளர்களும் உணவுகூட எடுத்துக்கொள்ளாமல் அடுத்த கட்ட ஏற்பாடு பற்றி தீவிரமாக யோசனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஒருவழியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சியை சிறப்பாக முடித்தாராம் பூஜா ஹெக்டே.

மேலும் படிக்க | ‘விஜய்- 67’ எப்படிப்பட்ட கதை?- லோகேஷ் கனகராஜின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News