ரஷ்யாவில் பைக் பயணம் செய்யும் அஜித்: பட்டையைக் கிளப்பும் வைரல் புகைப்படங்கள்

நடிகர் அஜித், ரஷ்யாவில் தனது வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும் அவர் தற்போது அங்கேயே சில நாட்கள் தங்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அவர் ரஷ்யாவில், பைக் மூலம் 5 ஆயிரம் கிலோமீட்டர் சுற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 12:27 PM IST
  • ரஷ்யாவில் வலிமை பட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
  • ரஷ்யாவில் நீண்ட பைக் பயணம் மேற்கொள்ளவுள்ளார் தல அஜித்.
  • பைக்குடன் அஜித் நிற்கும் புகைப்படங்கள் வைரல்.
ரஷ்யாவில் பைக் பயணம் செய்யும் அஜித்: பட்டையைக் கிளப்பும் வைரல் புகைப்படங்கள் title=

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான அஜித் ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றவர். அவரது படங்கள் பற்றியும், அவற்றைக் குறித்த சிறிய அப்டேட்டுகள் பற்றியும் எப்போதும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

தற்போது தல அஜித்தின் (Ajith) சில புகைப்படங்கள் மிக வேகமாக வைரல் ஆகி வருகின்றன. நடிகர் அஜித், ரஷ்யாவில் தனது வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும் அவர் தற்போது அங்கேயே சில நாட்கள் தங்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அவர் ரஷ்யாவில், பைக் மூலம் 5 ஆயிரம் கிலோமீட்டர் சுற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பைக் ஓட்டுவதில் அஜித் மிகுந்த ஆர்வமும் திறமையும் கொண்டுள்ளவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். பைக் மட்டுமல்லாமல், கார் ரேசிங்கிலும் அஜித் திறன் படைத்தவர். 

ALSO READ:  தல 60-ன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அஜித்தின் வலிமை (Valimai) பட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், அஜித் தனக்கு பிடித்த பைக் ரைடிங்கில் கவனத்தை செலுத்தத் தொடங்கினார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 5,000 கிலோமீட்டர் பைக் ரைடிங் செய்து அவர் ரஷ்யாவின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அவர் சில ரஷ்ய பைக் வீர்ரகளையும் சந்தித்துள்ளார். 

இந்த பைக் ரைடின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அஜித்தின் ரசிகர்கள் புகைப்படங்களை மிகவும் விரும்பி லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

Image

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை படத்தில், ஹூமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மீதமிருந்த ஒரு சேஸிங் காட்சி ரஷ்யாவில் படமாக்கப்பட்டது. 

இந்த சேஸிங் காட்சி 10 நாட்களுக்கு படமாக்கப்பட்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் ரஷ்யாவிலேயே சில நாட்களுக்கு தங்கி விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் உயர் ரக பைக்குடன் தல அஜித் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் (Viral) ஆகி வருகின்றன. 

ALSO READ: ‘தல-62’வில் இந்த தயாரிப்பாளருடன் இணைகிறாரா அஜித்? எப்போது படப்பிடிப்பு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News