பீஸ்ட்டை தாழ்த்தி பேசுவது தவறு - ஆரி காட்டம்

பீஸ்ட் படத்தை தாழ்த்தி பேசுவது தவறு என்று நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 19, 2022, 05:55 PM IST
  • 500 கோடி ரூபாய் வசூலித்த கேஜிஎஃப் 2
  • 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட 3.6.9
  • 21 ஆண்டுகளுக்கு கதாநாயகனாகும் பாக்யராஜ்
 பீஸ்ட்டை தாழ்த்தி பேசுவது தவறு - ஆரி காட்டம் title=

விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் கடந்த 13ஆம் தேதியும், யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 படம் 14ஆம் தேதியும் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற கேஜிஎஃப் 2 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை அந்தப் படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

Kgf 2

அதேசமயம் பீஸ்ட் படமும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இரண்டு படங்களையும் ஒப்பிட்டு கேஜிஎஃப் 2 படத்துக்கு அருகில்கூட பீஸ்ட் படம் வராது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தை பார்த்து கழுவி ஊற்றிய விஜய்யின் தந்தை!

இந்நிலையில் இரண்டு படங்களையும் ஒப்பிடுவது தவறு என்று நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘3.6.9’படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஆரி, “பீஸ்ட் - கேஜிஎஃப்பை ஒப்பிடுவதே தவறு. கேஜிஎஃப் ஒரு பான் இந்தியா படம், ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம். அதற்காக பீஸ்டை தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு. 

Beast

தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்குதான் ஒத்த செருப்பு போன்ற படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்குதான் உருவானது. தமிழ் படங்களை தாழ்த்தி பேசக்கூடாது. இதோ இந்தப் படத்தையும்81 நிமிடங்களில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படிப்பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க | வடிவேலு பாடிய Sing In The Rain - பின்னணி தெரியுமா?

‘3.6.9’ படத்தில் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கிறார். சரவணகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தை சிவ மாதவ் இயக்கியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News