SpiceJet விமானிகளுக்கு ஜாக்பாட்! இனி ஒவ்வொரு மாதமும் இவ்வளவு சம்பளம் கிடைக்கும்

SpiceJet Special Offer: விமானிகளுக்கான போஸ்ட் லிங்க்டு லாயல்டி விருதையும் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அத்துடன் பயிற்சியாளர் மற்றும் முதல் அதிகாரிகளின் சம்பளமும் உயர்த்தப்பட்டது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 24, 2023, 07:34 AM IST
  • வாடிக்கையாளர்களுக்கு ஸ்பைஸ்ஜெட் பம்பர் சலுகை.
  • விமானம் ஓட்டுவதற்கு 7.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
  • புதிய சம்பளம் மே 16, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
SpiceJet விமானிகளுக்கு ஜாக்பாட்! இனி ஒவ்வொரு மாதமும் இவ்வளவு சம்பளம் கிடைக்கும் title=

ஸ்பைஸ்ஜெட் விமானிகள் சம்பளம் உயர்வு: பட்ஜெட் விமான சேவையை வழங்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், விமானிகளின் (கேப்டன்கள்) சம்பளத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி விமான நிறுவனம் சார்பில் 75 மணி நேர விமான பயணத்திற்கு விமானிகளின் சம்பளம் மாதம் ரூபாய் 7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. புதிய சம்பளம் மே 16, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, நவம்பர் 2022 இல், விமான நிறுவனம் 80 மணிநேர விமானப் பயணத்திற்கான விமானிகளின் மாத சம்பளத்தை ரூபாய் 7 லட்சமாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

75 மணி நேரம் விமானம் ஓட்டுவதற்கு 7.5 லட்சம் சம்பளம்
விமானிகளுக்கான போஸ்ட் லிங்க்டு லாயல்டி விருதையும் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. பயிற்சியாளர் மற்றும் முதல் அதிகாரிகளின் சம்பளமும் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 மணி நேர பயணத்திற்கு விமானிகளின் மாத சம்பளம் ரூபாய் 7.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விமான நிறுவனம் தனது விமானிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் வரையிலான மாதாந்திர லாயல்டி வெகுமதிகளை அறிவித்தது. இது அவரது மாத ஊதியத்துடன் கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு

வாடிக்கையாளர்களுக்கும் பம்பர் சலுகை
ஸ்பைஸ்ஜெட் தனது வாடிக்கையாளர்களுக்கு 18வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜாக்பாட் சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகையின் கீழ், பயணிகள் வெறும் ரூபாய் 1818க்கு விமானங்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். வழக்கமான பயணிகளுக்காக இந்த சிறப்பு சலுகையை விமான நிறுவனம் கொண்டு வந்துள்ளது. ஒன்வே உள்நாட்டு கட்டண சிறப்பு விற்பனையை விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நீங்கள் பெங்களூரு-கோவா மற்றும் மும்பை-கோவா வழித்தடங்களில் பிரத்தியேகமாக சலுகையைப் பெறலாம். இதற்கு மே 23 முதல் 28 வரை டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளாம். மேலும் பயணம் செய்ய, ஜூலை 1 முதல் மார்ச் 30, 2024 வரை சலுகையின் கீழ் விமானங்களை முன்பதிவு செய்யலாம்.

இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட்டின் எம்-சைட் அல்லது மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் கூடுதல் பலன்களைப் பெறலாம். 2023 ஆம் ஆண்டில் 18 வயதை அடைந்த அல்லது 18 வயதை எட்டவிருக்கும் பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் ரூபாய் 3,000 மதிப்பிலான விமான வவுச்சர்களை இலவசமாக வழங்குகிறது. இந்த மெகா விற்பனையில், பயணிகள் தங்களுக்கு பிடித்த இருக்கையை ரூ.18க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் SpiceMax இலிருந்து 50% தள்ளுபடி பெறலாம்.

இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தபடி, ஸ்பைஸ்ஜெட் அதன் தரையிறக்கப்பட்ட 25 விமானங்களை மீண்டும் சேவைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. விமான நிறுவனம் அதன் நான்கு தரையிறக்கப்பட்ட விமானங்களான இரண்டு போயிங் 737 மற்றும் இரண்டு Q400 விமானங்களை ஜூன் 15 ஆம் தேதிக்குள் திருப்பி அனுப்ப இலக்கு வைத்துள்ளது. அத்துடன் இன்னும் சில வாரங்களில் விமானங்கள் மீண்டும் இயக்கப்படும்.

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News