Happy Birthday Thala Ajith: இன்று "தல" என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள்

கடந்த வாரமாக கொண்டாடி வந்த ரசிகர்கள், இன்று அஜித் பிறந்த நாள் என்பதால், அனைத்து சமூக வலைதளங்களில் அவரின் சாதனை மற்றும் வாழ்த்து செய்திகள் மட்டுமே அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 1, 2020, 12:26 AM IST
Happy Birthday Thala Ajith: இன்று "தல" என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள் title=

Happy Birthday Thala Ajith: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான, தல என செல்லமாக அழைக்கப்படும்  நடிகர் அஜித், இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆனால் இந்த முறை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால், உலகின் பல நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை அறிந்த நடிகர் அஜித், ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், இது போன்ற ஒரு சூழ்நிலையில், தான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை எனக் கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் வருத்தமாக இருந்தாலும், மறுபுறம் சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் [HBDDearestThalaAJITH] உருவாக்கி அவரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். 

கடந்த வாரமாக கொண்டாடி வந்த ரசிகர்கள், இன்று அஜித் பிறந்த நாள் என்பதால், அனைத்து சமூக வலைதளங்களில் அவரின் சாதனை மற்றும் வாழ்த்து செய்திகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. 

அவரின் சிலவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம்:

 

 

 

 

 

 

 

 

 

Trending News