Actor Pawan Kalyan About Karthi Apology In Tirupati Laddu Issue : கடந்த சில வாரங்களாக, இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது, திருப்பதி லட்டு பிரச்சனை. இந்த விஷயத்தில், பிரபலங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தை கூற, ஒன்றுமே பேசாமல் பிரச்சனையில் சிக்கியவர் நடிகர் கார்த்தி.
என்ன நடந்தது?
நடிகர்கள் கார்த்தி-அரவிந்த் சாமி நடித்து சமீபத்தில் வெளியான படம், மெய்யழகன். இந்த படத்தின் ப்ரமோஷன் விழாவில் ‘லட்டு பற்றி பேசாதீங்க, இப்பாே அதுதான் ரொம்ப சென்சிடிவான டாப்பிக்கா போயிட்டு இருக்கு” என்று கார்த்தி பேசினார். இதற்கு, நடிகரும் ஆந்திராவின் புதிய துணை முதலமைச்சருமா பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, நடிகர் கார்த்தி அவரிடம் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை வெளியிட்டார். இந்த மன்னிப்பு கேட்கும் குணத்தை தான் பாராட்டுவதாக பவன் கல்யாண் பதிலுக்கு ஒரு பதிவை வெளியிட்டார்.
ஒரு பக்கம், “தப்பே செய்யாமல் கார்த்தி மன்னிப்பு கேட்டது ஏன்?” என்று ரசிகர்கள் பேச, இன்னொரு பக்கம் “பவன் கல்யாண் ஏன் இப்படி ஓவர்-ரியாக்ட் செய்ய வேண்டும்?” என அரசியல் கர்த்தாக்கள் பேச ஆரம்பித்தனர். கார்த்தியின் மெய்யழகன் படம், தெலுங்கில் “சத்யம் சுந்தரம்” என்ற பெயரில் வெளியானது. இந்த படம் அங்கு ஓட வேண்டும் என்பதற்காக கார்த்தி மன்னிப்பு கேட்டதாக சிலர் கூறி வந்தனர். இந்த பிரச்சனை குறித்து, பவன் கல்யாண் முதன்முறையாக வாய்திறந்து பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | லட்டு பிரச்சனை முடிந்தும் திருப்பதிக்கு நடந்தே சென்ற பவன் கல்யாண்!
பவன் கல்யாண் பேசிய விஷயங்கள்..
கார்த்தி மீது கோபப்பட்டதற்கான காரணத்தை நடிகர் பவன் கல்யாண் விளக்கினார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “அவரது இலேசான பேச்சு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” என்றார். மேலும் அவரது கருத்தை கேட்டு பலர் சிரித்ததாகவும் பவன் கல்யாண் கூறினார். சத்யம் சுந்தரம் படத்திற்கு பின்விளைவுகள் ஏற்படும் என்று பயந்து கார்த்தி மன்னிப்பு கேட்டதாக பலர் கூறும் கருத்துகளையும் பவன் கல்யாண் நிராகரித்தார்.
மேலும், கார்த்தி-சூர்யா திருப்பதிக்கு செல்வதை தான் பார்த்திருப்பதாகவும், அவர்கள் இது போன்று பேசியது தனக்கு ஆச்சரியத்தை தந்ததாகவும் கூறினார்.
பவன் கல்யாண், திருப்பதி லட்டுவின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாக கூறி அதற்காக சில நாட்கள் விரதம் இருப்பது, காலணிகளை அணியாமல் நடைபயணம் மேற்கொள்வது பாேன்ற விஷயங்களை செய்து வருகிறார். மக்களை விட, பவன் கல்யாண் இதனால் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கார்த்தி என்ன கூறினார்?
ஹைதரபாத்தில் மெய்யழகன் படப் பிரமோஷனில் கேள்வியாளர் ஒருவர் திருப்பதி லட்டை பற்றி கேள்விஎழுப்பினார்.அதற்குக் கார்த்தி சிரித்துக்கொண்டே “அது உணர்வுப்பூர்வமான விவகாரம்” என்று சொல்லித் திருப்பதி லட்டு வேண்டும் என்று பதிலளித்தார். கார்த்திப் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிச் சர்ச்சைக்குரிய பேசுப்பொருளானது. இதை அறிந்த, பவன் கல்யாண் திருப்பதி லட்டை வைத்துச் சினிமாவில் கிண்டலாகப் பேசுவதா என்று x தளத்தில் கண்டித்தார். உடனே கார்த்தி “நான் கடவுளை மதிப்பவன் தவறாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும் என்று x தளத்தில் மன்னிப்புக் கூறினார். பிறகு இதனை பவன் கல்யாண் ஏற்றுக்கொண்டார்.
இந்த பிரச்சனை நடந்த சில நாட்கள் கடந்திருந்தாலும், மக்கள் இன்னும் இது குறித்து பேசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ