பீஸ்ட் பார்த்த ரஜினி... என்ன முடிவு எடுக்கப்போகிறார்?

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பீஸ்ட் படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 14, 2022, 09:37 AM IST
  • பீஸ்ட் பார்த்த ரஜினி
  • ரஜினியை இயக்குகிறார் நெல்சன்
  • கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட்
பீஸ்ட் பார்த்த ரஜினி... என்ன முடிவு எடுக்கப்போகிறார்? title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று பீஸ்ட் வெளியானது. புது கூட்டணியுடன் விஜய் கை கோர்த்ததால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் படத்துக்கு சென்றனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

குறிப்பாக தற்போதைய இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும்போது ஹீரோக்களின் இமேஜுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் கதையில் கோட்டை விட்டுவிடுகின்றனர் என்ற கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே பீஸ்ட் இருப்பதாக ரசிகர்களும், விமர்சகர்களும் கூறுகின்றனர்.

Vijay

இந்நிலையில் பீஸ்ட் படத்தை நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நேற்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | 10,000 தியேட்டர்களுக்கு மேலாக ரிலீஸாகும் கேஜிஎப் 2 - முதல் நாளில் இத்தனை கோடி உறுதியா? 

முன்னதாக பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மீது கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்தனர். மேலும், நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

 

எனவே அடுத்த படமும் நெல்சன் இதுபோல் எடுத்தால் என்னாவது என்ற கேள்வியை ரஜினி ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

Rajini

இப்படிப்பட்ட சூழலில் ரஜினி பீஸ்ட் படத்தை பார்த்ததாக வெளியாகி இருக்கும் தகவலால் ஒருவேளை அவர் இயக்குநரை மாற்றிவிடுவாரோ என்றும் ரஜினி ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.

மேலும் படிக்க | பிரதமருக்கே சவால் விட்ட ராக்கி பாய்! கேஜிஎஃப் 2 விமர்சனம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News