நடிகர் தனுஷை வைத்து வரும் காலங்களில் படம் எடுக்கக்கூடிய தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை செய்த பின்பே தங்களது படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்தே கோலிவுட் வட்டாரம் பரபரப்படைந்தது. இந்த பரபரப்புக்கு காரணம் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ்கே தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பது தான். முன்னதாக சில படங்களுக்கு ஒப்புக்கொண்ட நிலையில் அதற்கான முன்பணமும் பெற்றுருக்கிறார் நடிகர் தனுஷ், ஆனால் ஒத்துக் கொண்டபடி அந்த படங்களில் நடிக்க நாட்கள் ஒதுக்காமல் வேறு படங்களில் நடித்திருப்பதாக சில முன்னனி தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் குற்றச்சாட்டு கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்
இதன் காரணமாகவே தான் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சம்பத்தப்பட்ட அறிக்கை வெளியாதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக நடிகர் தனுஷை வைத்து அதிகமான படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், கலைபுலி தானு மற்றும் பைவ்ஸ்டார் கதிரேசன் ஆகியோரிடம் தலா ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தற்போது வரை தனுஷ் ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடிக்கும் வரை தயாரிப்பாளர் சங்கம் அவர்களுடைய உறுப்பினர்களாக இருக்கக்கூடிய தயாரிப்பாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், அதே சமயம் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் தான் தனுஷை வைத்து புதிய படத்தை தொடங்கினால் எங்களிடம் சொல்லிவிட்டு தொடங்குங்கள் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து பேசிய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி "எங்களிடம் சொல்லாமலேயே நீங்கள் எப்படி அறிவிக்கலாம்" என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கேள்வியை முன்வைத்திருந்தார். தற்போது நடிகர் தனுஷ் மீது யாரெல்லாம் புகார் சொல்லியிருக்கிறார்கள். என்னென்ன புகார் எந்த வருடம் ஒப்பந்தம் போடப்பட்டது எவ்வளவு பணத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகு தனுஷ் ஒப்பந்தம் செய்து நடித்துக் கொடுத்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பட்டியலை தற்போது தயாரிப்பாளர் சங்கம் தயார் செய்து வருவதாகவும் இதனை அறிவிக்கையின் மூலமாக வெளியிடப் போகிறார்களா? அல்லது புகார் தொகுப்புகளை நடிகர் சங்கத்துக்கு மட்டும் அனுப்பி வைக்கப் போகிறார்களா? என்பது அது வெளியாகும் போது தான் தெரியு வரும்.
நடிகர் தனுஷ் நடித்த படங்களின் தோல்வியின் காரணமாக அதே தயாரிப்பாளருக்கு வேறு படத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கும் முன்பணம் வாங்கிக் கொண்ட நிலையில் அந்த படங்களை முடித்து தரவில்லையே என்பதுதான் இந்த தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. மற்றொரு புறம் தகுந்த ஆதாரங்களை காரணமாக வைத்து நடிகர் தனுஷிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கொடுக்கவும் யோசிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி கோலிவுட்டை மேலும் பரபரப்படைய வைத்திருக்கிறது.
மேலும் படிக்க | யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ