கதாசிரியர்களே தயவு செய்து சினிமாவுக்கு வாருங்கள் - வசந்தபாலன் வேண்டுகோள்

தமிழ் சினிமாவுக்கு கதாசிரியர்கள் வரவேண்டும் அவர்களை தயாரிப்பாளர்கள் கொண்டாட வேண்டுமென்று இயக்குநர் வசந்த பாலன் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 5, 2022, 03:27 PM IST
  • குறும்பட நிகழ்ச்சியில் வசந்தபாலன் கலந்துகொண்டார்
  • இவர் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்
  • இவர் இயக்கத்தில் அநீதி படம் உருவாகிறது
 கதாசிரியர்களே தயவு செய்து சினிமாவுக்கு வாருங்கள் - வசந்தபாலன் வேண்டுகோள் title=

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் கடைசியாக ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த ஜெயில் படம் ரிலீஸானது. இதனையடுத்து அவர் அநீதி என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில், குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வசந்த்பாலன், "தமிழ் சினிமா ஒரே ஒரு விஷயத்தில்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாததுதான். 

தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். மலையாள திரை உலகில் கதாசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவு செய்த பின்புதான், மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை தேடி செல்கிறார்கள். அதுபோல இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும்.

Vasantha Balan

எப்போது சினிமாவிற்கான புரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் உருவாக்கப்படுகிறார்களோ, அப்பொழுதுதான் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறும். ரசிகர்களால் கொண்டாடப்படும். நான் ஒரு தயாரிப்பாளராக, கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள்” என்றார்.

மேலும் படிக்க | புஷ்பா 2: கெட்டப்பை வெளியிட்டு ஆழம் பார்க்கும் அல்லு அர்ஜூன்

மேலும் படிக்க | நட்சத்திரம் நகர்கிறது எப்போது ரிலீஸ்?... அப்டேட் வெளியிட்ட பா. இரஞ்சித்

மேலும் படிக்க | இந்தியன் 2: பாலிவுட் நடிகையை களமிறக்கும் சங்கர்! தாயான நடிகை நீக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News