வெப் சீரிஸில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று: வீடியோ!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் ‘குயின்' எனும் டீஸர் வெளியாகியுள்ளது. 

Last Updated : Dec 1, 2019, 03:42 PM IST

Trending Photos

வெப் சீரிஸில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று: வீடியோ! title=

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் ‘குயின்' எனும் டீஸர் வெளியாகியுள்ளது. 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் வலைதள தொடர் ‘குயின்'. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம். ஜி. ராமச்சந்திரனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த வெப் சீரிஸின் சில எபிசோடுகளை ‘கிடாரி' திரைப்பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரின் தலைப்புடனான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.
 
இந்நிலையில், குயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புடன் இப்படத்தின் 26 நொடிகள் கொண்ட டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

 

 

மேலும் இத்தொடரின் ட்ரெய்லர் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாக இந்த டீசரின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News