விஜய் சேதுபதி, வெற்றிமாறன், சூரி கூட்டணியில் உருவாகி உள்ள விடுதலை படத்தின் 2ம் பாகம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான விடுதலை 1 பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2வது பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் பல விருதுகளையும் வென்று குவித்தது. 1987 காலகட்டத்தில் நடைபெறும் இந்த கதையில் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் தீவிர அரசியலை பற்றி படம் பேசுகிறது. விஜய் சேதுபதி, சூரி தவிர பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தை RS Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். முதலில் சிறிய படமாக உருவான விடுதலை பின்னர் மிகப்பெரிய படமாக மாறி உள்ளது. விடுதலை 2 படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த வாரம் படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் புரமோஷனின் போது ஒரு பேட்டியில், விஜய் சேதுபதியிடம் தளபதி விஜய்யின் ‘GOAT’ மற்றும் சூர்யாவின் ‘கங்குவா’ படங்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சரியாக ஓடவில்லையே, இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்டது.
இதற்கு உடனடியாக பதிலளித்த சேதுபதி, “எனது படத்தின் ப்ரோமோஷனுக்கு நான் வரும் போது இதையெல்லாம் நான் ஏன் பேச வேண்டும்? இதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?” என்று சட்டென்று பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் பேசிய அவர், "ஒரு படம் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும், மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் எடுக்கப்படுகிறது. அதனால் தான் தயாரிப்பாளர்கள் முதலீடும் செய்கிறார்கள். ஒவ்வொரு படமும் வெற்றியடைவதும், தோல்வியடைவதும் மக்கள் கையில் தான் உள்ளது” என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.
If Telugu audiences like you, you will become a superstar.
- #VijaySethupathi at #VidudhalaPart2 Press meet pic.twitter.com/fNH9hIyXOx
(@BheeshmaTalks) December 15, 2024
2 மணி நேரம் 30 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் கொடுத்தது. இந்நிலையில் விடுதலை 2 படத்திற்கும் தணிக்கை குழு A சான்றிதழ் கொடுத்துள்ளது. படத்தில் பேசப்பட்டுள்ள தீவிரமான அரசியல் மற்றும் வன்முறை காரணமாக இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை 2ம் பாகம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | கைவிடப்படும் இளையராஜாவின் பயோபிக் படம்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ