ஆதார் அட்டை: ஆதார் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். பான் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்தும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்படும் பல திட்டங்களின் பலன்களை பெற ஆதார் அட்டை அவசியமாகிறது. இவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் (என்ஆர்ஐ) ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆதார் அட்டை
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாமா? அப்படி விண்ணப்பிக்கலாம் என்றால் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பலர் போதுமான தெளிவில்லாமல் இருப்பார்கள். செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் கொண்ட என்ஆர்ஐ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஐடிஏஐ தனது இணையதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
யுஐடிஏஐ இணையதளத்தின்படி, பாஸ்போர்ட் முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாக செயல்படுகிறது. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் யுஐடிஏஐ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலிலிருந்து பிற செல்லுபடியாகும் ஆவணங்களையும் கொடுக்கலாம்.
மொபைல் எண்: என்ஆர்ஐ விண்ணப்பதாரர்கள் ஒரு இந்திய மொபைல் எண்ணை சமர்பிப்பது முக்கியம்.
புதுப்பிக்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட் இல்லாமல் ஆதார் அட்டை பெறுவது எப்படி?
என்ஆர்ஐ விண்ணப்பதாரர்களுக்கு அடையாளச் சான்றாக செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் கட்டாயமாகும். எனினும், உங்கள் பாஸ்போர்ட்டில் முகவரி புதுப்பிக்கப்படாமல் இருந்து உங்கள் ஆதார் விண்ணப்பத்திற்கு, உங்களது தற்போதைய முகவரியை நீங்கள் கொடுக்க விரும்பினால், முகவரிக்கான சான்றாக யுஐடிஏஐ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் ஆதார ஆவணங்களை நீங்கள் வழங்கலாம்.
NRI-க்கான ஆதார் அட்டை: எப்படி விண்ணப்பிப்பது
ஸ்டெப் 1: உங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: உங்களின் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
ஸ்டெப் 3: பதிவு படிவத்தை எடுத்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும். பதிவுப் படிவத்தில் நீங்கள் பூர்த்தி செய்யும் விவரங்கள் உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
ஸ்டெப் 4: விண்ணப்பதாரர் தங்கள் மின்னஞ்சல் ஐடியை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
ஸ்டெப் 5: பின்னர் உங்களை NRI ஆக பதிவு செய்யும்படி ஆபரேட்டரிடம் கேளுங்கள்
ஸ்டெப் 6: ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது NRI விண்ணப்பதாரரும் ஒரு சுய அறிவிப்பில் (டிக்லரேஷன்) கையெழுத்திட வேண்டும். NRI களுக்கு இந்த டிக்லரேஷன் சற்று வித்தியாசமானது, எனவே கவனமாகப் படித்து அதை நிரப்பவும்.
ஸ்டெப் 7: என்ஆர்ஐ ஆக உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நிரப்ப ஆபரேட்டருக்கு உதவுங்கள்
ஸ்டெப் 8: உங்கள் பாஸ்போர்ட் ஸ்கேன் செய்யப்பட்டு, ஆபரேட்டரால் விண்ணப்பத்தில் அடையாளச் சான்றாக சமர்ப்பிக்கப்படும்.
ஸ்டெப் 9: பயோமெட்ரிக் கேப்சர் செயல்முறையை முடிக்க உங்கள் விரல்கள் மற்றும் கண்களை ஸ்கேன் செய்யுங்கள்.
ஸ்டெப் 10: விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களைப் பார்க்கவும். NRI விண்ணப்பதாரர்கள் விவரங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும்.
ஸ்டெப் 11: இதனுடன் ஆதார் படிவத்தை நிரப்பும் செயல்முறை நிறைவடையும். விண்ணப்பதாரரின் 14 இலக்க பதிவு ஐடி மற்றும் தேதி மற்றும் நேர முத்திரையைக் குறிப்பிடும் ஒப்புகை சீட்டைப் பெறவும்.
மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NPCI அளித்த குட் நியூஸ், அதிகரிக்கும் வசதி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ