தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் இலங்கைக்கு வரவேண்டும் என்று இலங்கை எம்.பி மனோ கணேசன் அழைப்பு விடுத்திருக்கிறார். சென்னையின் நடைபெறவுள்ள தமிழக வம்சாவளி தமிழர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னைக்கு வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில், "தமிழக அரசின் அழைப்பையேற்று, இந்திய வம்சாவளியான மலையக மக்கள் சார்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக இன்று (09.01.2023) சென்னை செல்கின்றேன். சென்னையின் நடைபெறவுள்ள தமிழக வம்சாவளி தமிழர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே செல்கின்றேன்”.
இதன்போது எமது மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை, துயரங்களை, கஷ்டங்களையெல்லாம் தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறவுள்ளேன். மக்களுக்கான தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் விளக்கமளிக்கவுள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பொதுமேடையில் பேசுவதுபோல் சட்டப்பேரவையில் பேசுவதா? ஆளுநரை சாடிய சபாநாயகர் அப்பாவு
இலங்கையின் நுவரெலியா பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை எம்.பி மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய அவர், இந்திய வம்சாவளி மக்கள் தான் 200 வருடங்களுக்கு முன் இலங்கையின் மலையக பகுதிக்கு வந்த வீர தமிழர்கள் என்று குறிப்பிட்டார்.
இந்திய வம்சாவளி மக்கள் தான் தமிழ்நாட்டின் உண்மையான தொப்புள்கொடி உறவுகள், அவர்கள் தமிழ்நாட்டின் வம்சாவளி என அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வந்து பார்க்க தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் இலங்கைக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கவும் போகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது ஜோஷிமடம்! மக்களை வெளியேற்றும் அரசு
தமிழால் இணைவோம் என்பதன் அடிப்படையில், தமிழக எல்லையைத் தாண்டி வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் தமிழக அரசு அயலக தமிழர் தினத்தை கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு முதல், ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக தமிழ்நாடு அரசால் அனுசரிக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள தமிழர் நல சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த முன்முயற்சி உதவுகிறது.
அயலகத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்கு உதவ 'தாய் மண் திட்டம்' என்ற அற்புதமான திட்டத்தையும் அயலக தமிழர் தினம் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றலாம்.
மேலும் படிக்க | பழனி கோவில் முருகரின் நவபாஷாணம் மற்றும் கருவறை சிலைகள் ஆய்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ