Solar Strom: எச்சரிக்கை! இன்று வீசும் சூரியப் புயலில் செல்போன்கள் காலியாகலாம்

மணிக்குக் குறைந்தது ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசும் சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கும், இது செல்போன், ஜி.பி.எஸ் சிக்னல்களை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதைத்தவிர அது வேறு சேதங்களையும் ஏற்படுத்துமா என்ற கவலைகளும் எழுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2021, 09:31 PM IST
  • சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கும்
  • செல்போன், ஜி.பி.எஸ் சிக்னல்களை உலகளவில் பாதிக்கும்
  • மணிக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் சூரியப்புயல் வீசும்
Solar Strom: எச்சரிக்கை! இன்று வீசும் சூரியப் புயலில் செல்போன்கள் காலியாகலாம்  title=

புதுடெல்லி: விண்வெளியின் தட்பவெட்ப நிலையை பற்றிய தகவல்களை தெரிவிக்கும் Spaceweather.com இதனை தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிவேகமான சூரியக் காற்று (solar wind) தற்போது மேலும் வேகம் பெற்று பூமியை நோக்கி வருகிறது.

ஞாயிறு முதல் திங்கட்கிழமைக்குள் (ஜூலை 11 - 12) எப்போது வேண்டுமானாலும் நமது பூமியை அடையும் என்று முன்னரே கணிக்கப்பட்டது. தற்போது அது பூமியை நெருங்கிவிட்டது.எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.

மணிக்குக் குறைந்தது ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசும் சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கும், இது செல்போன், ஜி.பி.எஸ் சிக்னல்களை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதைத்தவிர அது வேறு சேதங்களையும் ஏற்படுத்துமா என்ற கவலைகளும் எழுகின்றன.

Also Read | விண்வெளி போருக்கு தயாராகிறது சீனா, எச்சரிக்கும் அமெரிக்கா

சூரியனில் இருந்து அதிக சக்தியை பெற்ற சூரியக் காற்று புதன்கிழமை (ஜூலை 14) பூமியைத் தாக்கும் என்று தெரிகிறது. "ஜூலை 11 ஆம் தேதி வரவிருந்த சூரியக் காற்றின் அதிவேக காற்று கிட்டத்தட்ட 3 நாட்கள் தாமதமாகியிருக்கிறது ... சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு துளையிலிருந்து அந்த புயல் காற்று வருகிறது.

ஜூலை 14ஆம் தேதி பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன" என Spaceweather.com தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.. இதுபோன்ற நிகழ்வு செயற்கைக்கோள் செயல்பாடுகளை சீர்குலைக்கலாம், மின் தடைகள் ஏற்படக்கூடும்.

சூரியக் காற்றுகள் சூரியனில் இருந்து வெளியேறி விண்வெளியில் இருந்து வெளியேறுகின்றன. இவை சூரியனில் இருந்து சக்தி பெற்ற துகள்கள் அல்லது பிளாஸ்மா (plasma) ஆகும். இது பூமியின் காந்த மண்டலத்தில் ஒரு சிறிய சூரிய புயலைத் தூண்டக்கூடும். 

Also Read | உலகளாவிய 5G நிலையங்களில் 70% எங்களிடம் தான் உள்ளது: சீனா

இது பூமியின் காந்தப்புலத்தால் (Earth's magnetosphere) ஆதிக்கம் செலுத்தும் விண்வெளியின் ஒரு பகுதி என்பதால் செல்போன்களை மோசமாக பாதிக்கும், உலகளவில் ஜி.பி.எஸ் சிக்னல்கள் சேதமடையலாம் என்று விண்வெளி வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய தனது பதிவில் Spaceweather.com இவ்வாறு எச்சரித்துள்ளது: "சூரிய காற்றின் அதிவேக காற்று பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் வளிமண்டலத்தின் மத்திய ரேகை துளையிலிருந்து பாயும் காற்றின் வேகம், வினாடிக்கு 500 கிமீக்கு மேல் அதிகரிக்கக்கூடும். முழு நீள புவி காந்த புயல்கள் ஏற்படும் சாத்தியமில்லை என்றாலும் குறைந்த புவி காந்த புயல்களை ஏற்படுத்தும்” 

"அதிவேக" காற்று, சூரியனின் வளிமண்டலத்தில் ஒரு துளையின் விளைவாகும், மேலும் இது பூமியின் திசையில் சூரியக் காற்றின் வேகத்தைத்  தூண்டுகிறது. நாசா இந்த காற்றின் வேகத்தை மதிப்பிட்டுள்ளது, சராசரியாக, மணிக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசும். இதை விட மிக அதிக வேகத்திலும் சூரியப்புயல் வீசலாம்" என்ற செய்தி அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Also Read | நரகத்துக்கு சென்று வந்தேன், இறந்து மீண்டும் வந்தேன்: அதிர்ச்சி தகவலை அளித்த அமெரிக்கர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News