Chennai Rains Viral Video : தமிழகத்தின் வடக்கு பகுதியிலும், ஆந்திராவின் தெற்கு பகுதியிலும் புயல் மையம் கொண்டுள்ளதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னைக்கு, நேற்றும் இன்றும் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் படிப்படியாக தொடங்கிய மழை, தற்போது கனமழையாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக, பள்ளி-கல்லூரிகளுக்கு சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஐடி ஊழியர்களுக்கு வர்க்-ஃப்ரம்-ஹோம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து, பல நிறுவனங்கள் அதை இன்று பின்பற்றியுள்ளன. இந்த சமயத்தில் சென்னையில் அதிகாலை முதல் மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மழை நீர் வெள்ளம் போல தேங்கிநிற்க ஆரம்பித்து விட்டது.
அறுந்து விழுந்த மின்கம்பி:
முன்பு போல அல்லாமல், மழை பெய்யும் முன்னரே மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் முன்கூட்டியே தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க ஆரம்பித்து விட்டனர். மழையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளதை ஒட்டி, மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்ல, ஒரு சில இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மின் கம்பிகள் அறுந்து விழுகின்றன. இதனால், அப்பகுதிகளை சேர்ந்த மக்களும் அந்த வழியே செல்பவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். அந்த வகையில், தி.நகர் நடேசன் சாலையில் இருக்கும் ஒரு தெருவில், மின் கம்பி ஒன்று அறுந்து விழுகின்றது. தண்ணீரில் விழுந்தவுடன் அந்த மின்கம்பியில் இருந்து வரும் கதிர்களால் தீப்பொறி பரவ ஆரம்பித்து பின்பு வெடிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | Red Alert என்றால் என்ன? மழை காலங்களில் இது கொடுக்கப்படுவது ஏன்?
இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் வீட்டருகிலும் இது போல மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், அதிலிருந்து தள்ளி இருக்கவும்.
- அந்த தண்ணீரை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது.
- உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு என்னென்ன தகவல்கள் தெரியுமோ அதை அனைத்தையும் அவர்களிடம் கூற வேண்டும்.
- அந்த பக்கம் யாரும் வர வேண்டாம் என்று கூறி, வருபவர்களிடம் எச்சரிக்கை தெரிவிக்க வேண்டும். அந்த பிரச்சனை தீரும் வரை யாரும் தேங்கியிருக்கும் நீரில் கை வைக்க கூடாது.
மேலும் படிக்க | கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ