அந்தரத்தில் அச்சத்தால் அலறும் இளம்பெண்! என்னம்மா இப்படி பண்றீங்களே? ஆறுதல் சொல்லும் இளைஞர்!

பாராகிளைடிங் செய்யும்போது பயத்தால் அழும் பெண், இந்த வீடியோ வைரலாகும் என்ற வார்த்தையைக் கேட்டதும் சிரிக்கும் வீடியோ வைரலாகிறது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 16, 2022, 02:15 PM IST
  • வீடியோவில் வைரலாவாய் என்ற வார்த்தை செய்யும் மாயம்
  • வானத்தில் அழும் இளம்பெண்
  • அந்தரத்தில் அழுகை வீடியோ வைரல்
அந்தரத்தில் அச்சத்தால் அலறும் இளம்பெண்! என்னம்மா இப்படி பண்றீங்களே? ஆறுதல் சொல்லும் இளைஞர்! title=

Viral Video: வித்தியாசமான அனுபவங்களும், காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. ஆனால், வானத்தில் அழும் இளம்பெண்ணின் வீடியோவை பார்த்திருப்பது சந்தேகம் தான்...

இது விசித்திரமான வீடியோவாக தோன்றாது. வானத்தில் இருந்து கீழே பார்த்தால் பயப்படும் ஒரு பெண்ணின் இயல்பான அலறல் தான் அது என்பதால் இந்த வீடியோ வைரலாகிறது.

பாராகிளைடிங் வீடியோவை சமூக ஊடகங்களில் (Social Media) பார்க்கும் அனைவருக்குமே அந்த இளம்பெண்ணைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது.

பாராகிளைடிங் அனுபவத்திற்காக ஆசையாசையாய் சென்றப் பெண், உண்மையில் அந்த சாகசத் தருணம் வந்தபோது பயத்தால் அழுகிறார், புலம்புகிறார்.

ALSO READ | இப்பவே இப்படியா? திருமண மேடையில் நடந்த காமெடி கலாட்டா: வீடியோ வைரல்

பயிற்சியாளர் எவ்வளவுதான் ஆறுதல் சொன்னாலும், உயிர் பயம் என்பது நொடியில் போய்விடுமா என்ன? நொடிக்கு நொடி அதிகரிக்கும் பீதியில் பெண் அழுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்த வீடியோவை, ‘Paragliding is Amazing, isn't it?’ என்ற கேள்வியுடன், எம்.வி ராவ் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். வானத்தில் அழும் பெண்ணின் பாராகிளைடிங் வீடியோ வைரலாகிறது

பாராகிளைடிங் செய்யும் போது பயத்தில் அழுகும் இந்த இளம்பெண், பயமாக இருப்பதாக பயிற்சியாளரிடம் சொல்வதோடு, என்னை கீழே பார்க்கவிடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்.  

பயிற்றுவிப்பாளரோ தொடர்ந்து ஆறுதல் சொல்கிறார்.நீ கீழே பார்க்காதே என்று தொடர்ந்து வலியுறுத்தும் பயிற்சியாளரிடம், என்னால் கேமராவை பிடிக்க முடியாது என்கிறாள் அந்தப் பெண். 

ALSO READ | பனிப் புயலிலும் அசராத ராணுவ வீரர்கள்; வாலிபால் விளையாடி அசத்தல்!

அதற்கு கேலி செய்யும் ​​பயிற்றுவிப்பாளர், இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகப் போகிறது (Viral Video) பார், கீழே இறங்கிவிடலாமா? என்று கிண்டல் செய்கிறார். அந்தரத்திலும் நகைச்சுவையாக பேசும் இந்த கிண்டலால், பயத்தில் அலறும் பெண்ணுக்கும் சிறிது சிரிப்பு வருகிறது.

அதாவது வைரலாகும் வீடியோ என்றால், உயிர் பயத்திலும் சிரிப்பு வருகிறது என்பது,  தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் இளம் தலைமுறையினரிடம் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதற்கான சாட்சியாக இருக்கிறது.  

 ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் எம்.வி.ராவின் இந்த டிவிட்டர் பகிர்வை லட்சக்கணக்கில் மக்கள் பார்த்து, ரசித்து பகிர்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞன் பாராகிளைடிங் செய்யும் வீடியோ மிகவும் வைரலானதும் நினைவிருக்கலாம்.

ALSO READ | கடும்பனியிலும் பணியாற்றும் ராணுவ வீரர்கள்! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News