2012-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற விக்கி டோனர் திரைப்படத்தின் தமிழில் ரீமேகில் ஹரீஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
ஆயுஷ்மான் குரானாவின் முதல் திரைப்படம் விக்கி டோனார். நடிகர் ஜான் அப்ரஹாம் தயாரித்த இந்தத் திரைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்தது பாலிவுட்டில். இந்தத் திரைப்படம் ஹிந்தி மட்டுமல்லாமல் பெங்காளி, பஞ்சாபி ஆகிய மொடிகளிலும் ரிலீஸாகி மெகா ஹிட் அடித்தது.
மூன்று தேசிய விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என அனைத்து விருது விழாவிலும் பல விருதுகளைக் குவித்த இத்திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்தது.
விந்து தானம், குழந்தைப் பேரின்மை குறித்த இந்தக் கதையை காமெடி மற்றும் ரொமாண்டிக் கலந்து கூறியிருந்தார் படத்தின் இயக்குநர். அதன்பிறகு கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு சுமன் நடிப்பில் திரைக்கு வந்த சுமாராக ஓடியது.
தற்போது இந்த திரைப்படம் தமிழ் பெயர் தாராள ராஜா, தாராளப் பிரபு போன்று வைப்பதுபற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தை ஏ.எல் விஜய்யிடம் உதவி இயக்குநாராக இருந்த கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். தமிழில் ஹீரோவாக ஹரீஷ் கல்யாணும் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜானும் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தனுசு ராசி நேயர்களே மற்றும் கடசதபற ஆகிய படங்களில் ஹரிஸ் கல்யாண் நடித்து வருகிறார். நடிகை ரெபா மோகினா தளததி 63-இல் விளையாட்டு விராங்கனையாக நடித்துவருகிறார். இவர்களுடன் பாண்டியராஜன், முனீஷ்காந்த் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் முதல் படபிடிப்புத் துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.