Viral News: எப்போது மழை பெய்யும் என்று தெரிந்துக் கொள்ள, தொலைகாட்சியில் வானிலை அறிக்கையை பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பினால் எப்படி இருக்கும்?
இது கற்பனையல்ல, உண்மையாக நடந்த சம்பவம். தனியார் தொலைகாட்சி ஒன்று தனது வானிலை அறிக்கையை ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது, 13 விநாடிகள் ஆபாச காட்சிகளும் ஒளிபரப்பாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தனியார் தொலைகாட்சியில் வானிலை அறிக்கையை சுவாரசியமாக வழங்கிக் கொண்டிருந்த வானிலை ஆய்வாளர் மிஷெல் பாஸ் (meteorologist Michelle Boss, தனக்கு பின்னால் இருக்கும் திரையில் ஆபாசக் காட்சிகள் ஒளிப்பரப்பாவதை அறியாமல் அவர் வானிலை நிலைமையை சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பானபோது, வானிலை ஆய்வாளர் மிஷெல் பாஸ் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் தெரியுமா? ”நாட்டு மக்களுக்கு போனஸ் நாட்கள் கிடைக்கும், சூடான வானிலை, இப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது”.
உண்மையில், இந்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், கோபத்தில் சூடாகி, தொலைகாட்சி நிறுவனத்தை வறுத்து எடுத்துவிட்டார்கள்.
வானிலை அறிக்கையை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானது தங்களை அதிரச் செய்துவிட்டதாகவும், தாங்கள் உடனடியாக சேனலை நிறுத்திவிட்டதாகவும் பல பார்வையாளர்கள் போன் போட்டு தொலைகாட்சி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
Also Read | அய்யோ கேமரா... வித்தை செய்த திருடன்: வேடிக்கையான வீடியோ
செப்டம்பர் 17ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு சிபிஎஸ் இணை சேனலான KREM இல் வெளிப்படையாக ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றதாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் படுக்கையில் படுத்திருக்கிறார். பெண்ணின் உடலையும் அவரது நிர்வாணமான பின்புறமும் தெரிகிறது. கிளிப் பின்னர் நிறுத்தப்பட்டு, பின்னர் காட்டப்படும் வானிலை வரைபடங்கள் காட்டப்பட்டன.
"ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில், [Spokane Police Department] ஒரு தொலைக்காட்சி வானிலை முன்னறிவிப்பின் போது ஆபாசமான காட்சி ஒளிபரப்பானது தொடர்பாக தொலைகாட்சி நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன” என்று காவல்துறை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
தவறுதலாக ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய KREM தொலைகாட்சி, பல மணி நேரம் கழித்துதான், தவறுக்கு மன்னிப்பு கேட்டது. "இன்று மாலை 6 மணிக்கு செய்தி ஒளிபரப்பில் நடந்த தவறுக்கு KREM 2 மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. நிகழ்ச்சியின் முதல் பகுதியில் பொருத்தமற்ற வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்வோம்” என்று KREM 2 மன்னிப்புக் கோரியது.
Also Read | காதலில் விழுவது என்றால் இதுதானா? ஆடிய ஜோடி, ஆடிப்போன ஸ்டேஜ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR