இப்புடி ஏமாத்திட்டியே சித்தப்பு! வளர்ப்பு நாயால் அடிவாங்கிய நபர்!

நாய் ஒன்று அதன் உரிமையாளர் உடற்பயிற்சி செய்யும்பொழுது உதவி செய்வது போல செய்து திடீரென்று விலகியதும் அந்த நபர் கீழே விழுந்துவிடும் காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Written by - RK Spark | Last Updated : Sep 14, 2022, 09:31 AM IST
  • நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் நபர்.
  • திடீர் என்று நாய் விலகியதால் கீழே விழுந்தார்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
இப்புடி ஏமாத்திட்டியே சித்தப்பு! வளர்ப்பு நாயால் அடிவாங்கிய நபர்! title=

நாய்கள் நன்றியுள்ள பிராணிகள் என்று கூறப்படுவது எவ்வளவு உண்மையோ அந்த அளவு உண்மை நாய்கள் குறும்புத்தனங்கள் நிறைந்தவை என்பதும்.  பொதுவாக விலங்கினங்களும் சேட்டைகள் செய்வதில் சில சமயம் குழந்தைகளை போன்று தான் செய்கிறது, குழந்தைகள் செய்யும் சேட்டைகள் எப்படி நம்மை கோபப்படுத்தாமல் மகிழ்விக்கிறதோ அதுபோல தான் இதுபோன்ற விலங்கினங்கள் செய்யக்கூடிய சில குறும்புத்தனமான வெளிகளும் நம்மை கோபப்படுத்தாமல் மகிழ்விக்கிறது.  இப்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நாய் ஒன்று அதன் உரிமையாளருக்கு செய்த செயல் அனைவரையும் சிரிக்க செய்துள்ளது.

மேலும் படிக்க | Video: ஆசிரியையின் கோபத்தை காதல் முத்தத்தால் தணித்த சுட்டி குழந்தை

ட்விட்டரில் யோக் என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது அந்த நாயின் குறும்புத்தனமான வீடியோ.  அந்த வீடியோவில், பெட்டில் படுத்துக்கொண்டு சிட்-அப்ஸ் செய்வது போன்று உடற்பயிற்சி செய்கிறார்.  அவரது காலை பேலன்ஸ் செய்வதற்காக அந்த நபர் அவரது வளர்ப்பு நாயிடம் தனது காலின் மீது ஏறி அமர சொல்கிறார், அந்த நாயும் அவர் பயிற்சி செய்ய உதவுவது போன்று அவர் கால் மீது அமர்ந்து இருக்கிறது.  திடீரென்று பொறுமையிழந்த அந்த நாய் என்ன நினைத்தது தெரியவில்லை, உடனே அவருக்கு உதவி செய்யாமல் அவரை விட்டு தாவி குதித்து ஓடிவிடுகிறது.  நாய் தனது காலில் அமர்ந்திருந்ததால் நன்றாக பயிற்சி செய்தவர் நாய் போனதும் பேலன்ஸ் செய்யமுடியாமல் கீழே விழுந்து விடுகிறார்.

 

இந்த காட்சியை ட்விட்டரில் பார்த்த இணையவாசிகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர், இதுவரை இந்த வீடியோவை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், கமெண்ட் செக்ஷனில் பல சிரிப்பு எமோஜிகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | Horrifying Video: தானாக இயங்கிய கார்... பழுது பார்ப்பவரை மோதி நசுக்கிய பயங்கரம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News