கிழக்கு ஐரோப்பா பகுதியில் 'ஆரஞ்சு' நிறத்தில் படர்ந்திருந்த பனி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஐரோப்பா பகுதிகளை ஆரஞ்ச நிறத்திலான படர்ந்திருப்பதுபோல காட்சியளித்தால் அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாது உலக மக்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ரொமானியா மற்றும் மால்டோவா போன்ற நாடுகளில் படர்ந்திருந்த லேசான ஆரஞ்சு நிறம் நிறைந்த பனியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சஹாரா பாலைவனத்தில் வீசும் மண் புயலானது, பனி மற்றும் மழையுடன் கலந்துள்ளதால் இந்த நிறத்தில் பனி படர்ந்திருக்கிறது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், ரஷ்யாவின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு, பனி, மாசுக்கள், நைட்ரேட்டு கள் மற்றும் பெரிய அளவிலான இரும்புச் சத்துக்கள் ஆகியவை கலந்து, அதன் காரணமாக வேதியியல் மாற்றத்தின் விளைவாக இருக்கலாம் பனியின் நிறம் மாறியிருக்கலாம் என்று கூறி உள்ளது.
இதுபோன்ற ஆரஞ்சு நிறத்திலான பனி போர்வை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் என்றும், அது அந்த பகுதி மண்ணின் அளவை பொறுத்து அமையும் என்றும் கூறப்படுகிறது.