வாஷிங்டன்: மரணத்திற்கு பிறகு மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவத்தை ஒரு அற்புதம் என்றோ பேரதிசயம் என்றோ கூற வேண்டும். அத்தகைய ஒரு சம்பவம் அமெரிக்காவின் மேரிலாந்தில் நடந்துள்ளது. அங்கே ஒரு பெண் இறந்து 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது.
மகளுக்கு பிரசவ வலி தொடங்கியதாக வந்த தகவல்
இறந்த பிறகு மீண்டும் உயிர்த்து எழுந்த அந்த பெண்ணின் பெயர் கேத்தி பாட்டன். அவர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக மொபைலில் அழைப்பு வந்தது.
மருத்துவமனையில் ஏற்பட்ட மாரடைப்பு
பிரசவ வலி குறித்த தகவல் கிடைத்த பிறகு, கேத்தி உடனடியாக வீட்டிற்குச் சென்றார், அங்கிருந்து அவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனைக்கு வந்த பின்னர், கேத்தி பாட்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பின்னர் 45 நிமிடங்கள் கழித்து அவர் மீண்டும் உயிரோடு எழுந்தார். அதே நேரத்தில் அவரது மகள் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.
கேத்தி பட்டான்
மாரடைப்பு ஏற்பட்ட கேத்தி பாட்டனுக்கு ஒரு மணி நேரம் CPR வழங்கப்பட்டது. மாரடைப்புக்குப் பிறகு, மருத்துவர்கள் கேத்தியை பரிசோதித்தனர். அவரது இதய துடிப்பு இயங்கவில்லை. அவரது மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. டாக்டர்கள் சுமார் ஒரு மணி நேரம் கேத்திக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்தனர். அதன் பின்னர் அவருக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.
ALSO READ | Viral News: செல்ல நாய்க்கு அடித்த யோகம்; விமானத்தில் ‘சொகுசு’ பயணம்
கடவுளுக்கு நன்றி
கடவுள் எனக்கு உயிர் கொடுத்துள்ளார் என்று கேத்தி மகிழ்ச்சியுடன் கூறினார். வாழ்க்கையை வாழ எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது, அதனால், கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார். அதே நேரத்தில், கேத்தியின் மகள் என் அம்மா. என் மகளின் முகத்தைப் பார்க்க வேண்டும் என இருந்திருக்கிறது; ஒருவேளை அதனால்தான் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று கூறினார். என் அம்மா - மகளுக்கு இருவருக்கும் மறுஜென்மம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என நெகிழ்ந்தார் உயிர்த்தெழுந்த அந்த பெண்மணியின் மகள்.
ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR