ஆயுத பூஜை 2024: செய்யும் தொழிலே தெய்வம் என்பது பழமொழி. வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல கல்வி எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே செய்யும் தொழிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி உள்ளது. அந்த வகையில் நவராத்திரியின் இறுதி நாளான ஒன்பதாம் நாள், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அனுசரிக்கப்படுகிறது. ஆயுத பூஜை அன்று, முறையாக வழிபட்டால், தொழிலில் வெற்றிகளை குவித்து, சாதனை படைக்கலாம்.
நவராத்திரி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை வழிபடும் பழக்கம் உள்ளது. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வணங்கும் பழக்கம் உள்ளது. இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.
கல்வித் தொழில் இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புத்தகங்களை கொண்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அதேபோன்று தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகள், வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள், அலுவலக பணியில் பயன்படுத்தப்படும் கருவிகள் மகிவற்றை வைத்து வழிபாடு நடத்தி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜையின் முக்கியத்துவம் பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்கள் கௌரவர்கள் செய்த சதியால், சூதாட்டத்தில் தோற்ற பிறகு அவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரத்தின் உள்ள செந்தில், ஆயுதங்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
வனவாசம் முடிந்த பிறகு, ஆயுத பூஜை நன் நாளில் தான், தாங்கள் பாதுகாப்பாக வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து, வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்பது நாட்களிலும், கடுமையான விரதம் மேற்கொண்டு, இறுதியாக ஒன்பதாவது நாளில் ஆயுதங்களை வைத்து வழிபட்டதால், இதற்கு ஆயுத பூஜை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு எச்சரிக்கை.. யோகமா? சோகமா?
ஆயுத பூஜை அன்று வீட்டில் பயன்படுத்தப்படும், அனைத்து உபகரணங்கள் சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றை சுத்தமாக துடைத்து, சந்தனம் குங்குமம் இட்டு பூஜையில் வைத்து வழிபட வேண்டும்.
பூஜை அறையில், துர்கா லட்சுமி சரஸ்வதி தேவிகளின் படங்களை வைத்து, அன்று பூத்த அழகான புஷ்பங்கள், தேங்காய், பொரிகடலை, பல வகையான பழங்கள் ஆகியவற்றை படைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
சிறிய பெட்டி கடை முதல், பெரிய தொழில் நிறுவனங்கள் வரை, வியாபாரத்தில் வெற்றி பெறவும், தொழிலில் நஷ்டம் ஏதும் இல்லாமல் பாதுகாப்பாக நடக்கவும், வேண்டிக் கொண்டு இந்த பூஜை செய்யப்படுகிறது. எந்திரங்கள் மற்றும் வாகனங்கள், பழுது இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்றும், எந்தவித காயம் மற்றும் விபத்து ஏற்படக்கூடாது என்றும் வேண்டிக் கொண்டு பூஜை செய்வது சிறப்பு.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை இந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. காலை 9 மணிக்குள் பூஜையை செய்வது சிறப்பு. இதனால், தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைத்து, தொழிலில் வியாபாரத்தில் அலுவலகத்தில் வெற்றிகளையும் லாபத்தையும் குவித்து வாழ்க்கையில் சாதனைகளை படைக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஆன்மீக நூல்கள், ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ