இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் கோகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, நம் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில், லட்சுமி வழிபாடு மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நன்மைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், இந்த நாளில் சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெற்று பித்ரு தோஷத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
அமாவாசை தினத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பது அனைவரும் இருந்ததே. அமாவாசை முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேதியாகவும் கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் முன்னோர்களை மகிழ்விக்க ஐப்பசி அமாவாசை அல்லது தீபாவளியன்று நீங்கள் செய்ய வேண்டியவை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு பல்வேறு மன கஷ்டங்கள் தொடர்ந்தால் அது உங்கள் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக கருட புராணம் கூறுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, பித்ரு தோஷங்கள் நீங்க உகந்த நேரத்தில் பரிகாரம் செய்ய வேண்டும். பித்ருகளுக்கு செய்யவேண்டிய காரியங்களை செய்தால் இந்த தோஷம் அகலும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலை நீடித்தால், அதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கலாம். இதை போக்க, தீபாவளியன்று மாலை, கங்கை நதிக்கரையிலோ, பீப்பல் மரத்தடியிலோ, முன்னோர்களை நினைத்து, 16 தீபங்கள் ஏற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆன்மாக்கள் திருப்தி அடைவதாக நம்பப்படுகிறது. அவர்கள் அமைதியைப் பெறுகிறார்கள், இது நம் வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தானம்
இந்து மதத்தில் அன்னதானம் மிக சிறப்பான தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, உங்கள் முன்னோர்களின் நலன் கருதி, இந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இது தவிர, இந்த நாளில் நீங்கள் பிராமணர்களுக்கு உணவு வழங்கலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் முன்னோர்களும் மனம் அமைதி பெறுகின்றனர். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தை பெறலாம். உணவுடன் நீரும் தானம் செய்ய வேண்டும்.
ஆடை தானம்
உணவிற்கு அடுத்தபடியாக, ஆடைகள் தானமும் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், பித்ருக்களின் ஆசியுடன், குலதெய்வங்களின் அருளும் கிடைக்கும். உங்களது திறனுக்கு ஏற்ப ஆடைகளை தானமாக வழங்கலாம்.
பிரதோஷ காலத்தில் முன்னோர்களை வழிபடுதல்
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 3 மணி நேரம் பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் லட்சுமி கணேச பூஜை மற்றும் குபேர தேவ பூஜை ஆகியவை செய்து வழிபடும் பாரம்பரியமும் உள்ளது. தீபாவளியன்று, தெய்வ வழிபாடு செய்த பிறகு, உங்கள் முன்னோர்களையும் வணங்க வேண்டும். பிரதோஷ காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் விலகும். இந்த நேரத்தில், உங்கள் மூதாதையர்களை வணங்கும், நீங்கள் அவர்களின் புகைப்படங்களின் முன் தூபம் அல்லது தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.
பித்ருசூக்தம் அல்லது கீதா பாராயணம்
தீபாவளியன்று முன்னோர்களை வழிபடும் போது, பித்ருசூக்தம் அல்லது கீதை பாராயணம் வேண்டும். இந்த புனித நூல்களில் ஏதேனும் ஒன்றைப் பாராயணம் செய்வதன் மூலம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அது நிச்சயமாக வாழ்க்கையில் மகிழ்ச்சியான முடிவுகளைத் தரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | துர்மரணத்தைத் தவிர்க்க எமனுக்கு மாவிளக்கு! தந்தேரஸ் நாளில் எம தீபம் ஏற்றினால் மரணபயம் இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ