நவகிரகங்கள் இந்தியாவில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக ஜோதிட சாஸ்திரம் இருந்தாலும், முன்னெபோதையும்விட ஜாதகம் பார்ப்பது என்பதும், ஜோதிடர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தற்காலத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தொலைதொடர்பு வசதிகள் அதிகரித்தது தான், சொடக்கு போடும் நேரத்தில் மொபைலில் ராசிபலன்களை பார்த்துவிடுகிறோம்.
ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் தான். ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்றவாறு பலன்கள் மாறும். ஆனால், நவகிரகங்களின் இருப்பு தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவைகளாகவே இருக்கும். ஏனெனில் அவை கணிப்புகள் அல்ல, புராணங்கள் மற்றும் ஜோதிட நூல்களில் இருப்பதை அவரவர் வார்த்தைகளில் சொல்வது தான். அதன் வீரியம் கூடும் அல்லது குறையும் என்பதைத் தவிர முற்றிலுமாக மாறிவிடாது.
நவகிரகங்களில் சுக்கிரனின் முக்கியத்துவம் என்பது தேவகுரு வியாழனுக்கு அடுத்தது. சுப கிரகமான சுக்கிரன் ஒருவரின் வளமான வாழ்க்கைக்கு காரணம் ஆகிறார். குரு பகவான், தனக்காரகர் என்ற பெயர் பெற்றவர். ஜாதகருக்கு பண வரவு எப்படி இருக்கும் என்பதை குருவின் நிலையை வைத்து சொல்லிவிடலாம். அப்படி குரு பணம் கொடுத்தால் அந்தப் பணத்தைச் மகிழ்ச்சிக்காக செலவு செய்ய வைப்பவர் சுக்கிரன்.
பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்பவர்கள், சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். அதேபோல, ஒருவர் பணத்திற்காக படாத பாடு படுபவராக இருந்தால், அவருக்கு சுக்கிரனின் அருள் இல்லை என்பதை அவரின் ஜாதகத்தைப் பார்க்காமலே அறிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
சுக்கிரன்: உச்சம் மற்றும் நீசம்
சுக்கிரன் வலுவாக இருந்தால் உச்சம் என்றும் பலவீனமாக இருந்தால் நீசம் என்றும் பொதுவாக நினைத்து கொள்கின்றனர். உண்மையில், சுக்கிரன்ஆட்சி பெறுவது என்பது தனது சொந்த வீட்டில் இருப்பது. உச்சம் என்பது முழு பலத்துடன் இருக்கும் நிலையை குறிப்பது என்றால், சுக்கிரன் நீசம் என்பது உச்ச வீட்டிற்கு நேர் ஏழாம் வீடு. இந்நிலையில் சுக்கிரன் தனது முழு பலத்தையும் இழந்து இருக்கும். இது செல்வாக்கில்லாதவர்களின் ஜாதகத்தில் இருக்கும் அமைப்பாக இருக்கும்.
கன்னி ராசியில் சுக்கிரன் நீசம் அடைந்திருந்தாலும், ஒருவரின் லக்னத்தில் இருந்து 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தாலும், எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம், அதாவது கெளரவத்திற்கு பங்கம் ஏற்படுவது, அவமானம், பணம் இருந்தாலும் அதனை அனுபவிக்க முடியாதது என சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது சுக்கிரன் சில தினங்களுக்கு முன்னர் பெயர்ச்சி நடைபெற்ற நிலையில், இதே ஜூலையில் சுக்கிரன் மீண்டும் பெயர்ச்சியடைவது மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். ஜூலை 7 ஆம் தேதி, மிதுன ராசியில் இருந்து கடகத்திற்கு சென்ற சுக்கிரன், கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு ஜூலை 31இல் மாறுவதால், சில ராசிகள் கஷ்டப்படும் என்றால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். அதிர்ஷ்ட்டத்தால் மகிழ்ச்சியாக வாழப்போகும் ராசிக்காரர்கள் எந்த ராசியை சேர்ந்தவர்கள்? தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
இந்த இரு சுக்கிரனின் சஞ்சாரங்களும் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிப்பதுடன் தொழில் வாழ்க்கையில் நிம்மதியான சூழல் ஏற்படும். ஊதிய உயர்வு, நிலுவையில் இருந்த பணம் வசூலாவது, குடும்பத்தின் சொத்தில் இருந்து வருவாய் என பண பலன்களைப் பெறலாம்.தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும்.
மேலும் படிக்க | புத்ரதோஷத்தால் சோகமா? புத்ர சோகத்திற்கு பரிகாரங்கள்! வழிபட வேண்டிய தெய்வங்கள்
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சார மாற்றம் நல்ல பலனைத் தரும். சுக்கிரன் கடகத்தில் இருக்கும்போது கடக ராசிக்காரர்களுக்கு ஆதாயத்தைக் கொடுக்கும் சுக்கிரன், அவர்களை நிதி நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். செல்வச் செழிப்பும், பணம் சம்பாதிப்பதில் வெற்றியும் கொடுத்து அருள் புரியும் சுக்கிரனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால், கடக ராசிக்காரர்களின் வங்கி இருப்புத் தொகை அதிகரிக்கும்.
துலாம்
ஜோதிட சாஸ்திரப்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நன்மைகளைத் தரும். திடீர் பணவரவும், செல்வம் சேரும் வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலில் வெற்றி பெறும் அதே நேரத்தில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கடன்களை திருப்பி அடைத்துவிட்டு, நிம்மதியாய் இருக்க சுக்கிரன் அருள் புரிவார்.
விருச்சிகம்
சுக்கிரனின் சஞ்சாரம் நீண்டகால பிரச்சனைகளை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவதால் மகிழ்ச்சி ஏற்படுவது ஒருபுறம் என்றால் பண வரவுக்கு புதிய வழிகள் உருவாவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மனதின் மகிழ்ச்சி உடலிலும் எதிரொலித்து, தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ